ஆண்ட்ராய்ட் 6.0+ (Marshmallow and above) போன்களில் தற்போது ஹிந்தி மொழியில் செயல்படும் Google Assistant வெளியாகியுள்ளது!
முன்னதாக கடந்த ஆண்டு Allo பதிப்புகளில் Google Assistant வெளியானது. இதனையடுத்து தற்போது ஆண்ட்ராய்ட் 6.0+ பதிப்புகளில் வெளியாகியுள்ளது. விரைவில் Android 5.0+ Lollipop, Android Oreo (Go edition), மற்றும் iPhones (iOS 9.1) போன்களில் வெளியாகும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Google Assistant என்பது கூகிள்-ன் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும், இது ஸ்மார்ட்போன்கள் 'முகப்புப்பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது மைக்ரோஃபோனில்' OK Google' என்று கூறுவதன் மூலம் பயன்படுத்தலாம். அதாவது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை மெய்நிகர் உதவியாளராக மாற்ற அனுமதிக்கின்றது.
முன்னதாக Google Assistant, 8 மொழிகளில் (ஆங்கிலம், ப்ரஞ்ச், ஜெர்மன், இட்டாலி, ஜப்பானிஸ், கொரியன், ஸ்பேனிஸ், போர்ட்கீஸ்) பயனர்களின் கட்டளைகளை புரிந்து செயல்பட்டது. இதனையடுத்து விரைவில் ஹிந்தி மொழி உள்பட 30 மொழிகளில் செயல்படும் வகையில் இந்த செயலி மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையது Allo பதிப்புகளில் வெளியானது.
இந்நிலையில் தற்போது Android 6.0+ பதிப்புகளில் வெளியாகியுள்ளது. விரைவில் Android 5.0+ Lollipop, Android Oreo (Go edition), மற்றும் iPhones (iOS 9.1) போன்களில் வெளியாகும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.