IND vs PAK, Playing XI Prediction, Pitch Report: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் தொடர் (ICC Champions Trophy 2025) கடந்த பிப்.19ஆம் தேதி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா 1 போட்டியை விளையாடிவிட்டன. அதுவும் இந்த வார இறுதியில் இரண்டு பிரம்மாண்ட போட்டிகள் திட்டமிடப்பட்டன.
AUS vs ENG: இங்கிலாந்தை நடுங்க வைத்த ஆஸ்திரேலியா
முதலாவதாக, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் (Australia vs England) நேற்று பாகிஸ்தானின் லாகூரில் மோதின. இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 351 ரன்களை குவித்து, ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பென் டக்கெட் 165 ரன்களை அடித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ரன்களையும் பதிவு செய்தார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா (Team Australia) இந்த மாபெரும் ஸ்கோரை 15 பந்துகளை மிச்சம் வைத்து அடித்து தூள் கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியா 356 ரன்களை அடித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஜாஸ் இங்லிஸ் 120* (86) ரன்களை அடித்து மிரட்டினார். மேட் ஷார்ட், லபுஷேன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரின் சிறப்பான பங்களிப்பாலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
IND vs PAK: பிளாக்பஸ்டர் இந்தியா - பாகிஸ்தான் போட்டி
சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டியால் சூடுபிடித்திருக்கும் நிலையில், இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி (India vs Pakistan) துபாயில் நடைபெற இருக்கிறது. டி20ஐ விட அதிக சுவாரஸ்யம் கொண்டது இந்த ஒருநாள் பார்மட் என்பதை நேற்றைய போட்டி நிரூபித்துவிட்டது எனலாம். அதேபோல், இன்றைய போட்டியும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை அளிக்கும் எனலாம்.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதல்
இந்திய அணி (Team India), பாகிஸ்தான் அணி (Team Pakistan) உடன் ஒருநாள் அரங்கில் 135 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 57 முறையும், பாகிஸ்தான் 73 முறையும் வெற்றி உள்ளன. 5 போட்டிகளுக்கு முடிவில்லை எனலாம் (IND vs PAK Head to Head). இருப்பினும், சமீப காலமாக இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது. இந்த போட்டியில் ஆடுகளமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
#ChampionsTrophy | #PAKvIND | #WeHaveWeWill pic.twitter.com/VM2og8G0jr
(@TheRealPCB) February 21, 2025
IND vs PAK: துபாய் ஆடுகளம் எப்படி?
பேட்டிங் - பந்துவீச்சு இரண்டிற்கும் இந்த ஆடுகளம் சாதகமாக (IND vs PAK Pitch Report) செயல்படும். புதிய பந்தில் ஆரம்ப கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து நல்ல உதவி கிடைக்கும். போட்டி செல்ல செல்ல, வெயிலில் ஆடுகளம் காயத்தொடங்கும் போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் பந்து ஆடுகளத்தில் நின்று வரலாம், ஆடுகளத்தில் குத்தி திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு முக்கியமாகும்.
IND vs PAK: துபாயில் மழை இருக்குமா?
இருப்பினும், இரவில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக ஆடுகளம் மாறலாம். பனிப்பொழிவு கடந்த போட்டியிலும் பெரிதாக இல்லை. எனவே, டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பேட்டிங் எடுத்து பெரிய ஸ்கோரை அடிக்க முயற்சிக்கும் என நம்பலாம். போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பே இல்லை (IND vs PAK Weather Report).
IND vs PAK: பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா?
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் (Team Pakistan Playing XI). ஃபக்கார் சமான் இடத்தில் இமாம் உல்-ஹக் வருவார். தய்யப் தாஹிர் இடத்தில் கம்ரான் குலாமிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். அவர் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். அப்ரார் அகமது, குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா உள்ளிட்டோரும் சுழற்பந்துவீச்சில் கைக்கொடுப்பார்கள். இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது (Team India Playing XI). குல்தீப் சிங், ஹர்ஷித் ராணா இருவருமே தொடர்வார்கள் என கணிக்கப்படுகிறது.
#TeamIndia | #ChampionsTrophy | #PAKvIND pic.twitter.com/wzgEvycPWG
— BCCI (@BCCI) February 22, 2025
IND vs PAK: நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை நீங்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம். ஜியோஹாட்ஸ்டார் செயலியிலும், தளத்திலும் நேரலையில் காணலாம் (IND vs PAK Live Telecast).
IND vs PAK: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்
பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, கம்ரான் குலாம்/தய்யப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
மேலும் படிக்க | இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும் - ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ