ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஏழைகள் அல்லாதவர்களையும் உள்ளடக்கும் வகையில், அனைத்து சுகாதார காப்பீட்டு திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
107.4 மில்லியனுக்கும் அதிகமான ஏழை குடும்பங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருடத்திற்கு 5 லட்சம் என்ற அளவில் காப்பீட்டு பாதுகாப்பு அளிக்கிறது.
புதுடில்லி: இந்த திட்டத்தில் நாட்டின் ஏழை அல்லாத மக்களை உள்ளடக்கும் வகையில், அம்த்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தி, ஆயுஷ்மன் பாரத் பிரதம மந்திரி ஜன் அரோக்ய யோஜனா, அதாவது ஆயுஷ்மன் பாரத் மக்கள் சுகாதார நல திட்டத்தின் கீழ் (AB PM-JAY) அதன் பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டங்களை ஒருங்கிணைக்கும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) நிர்வாக குழு வியாழக்கிழமை, முறைசாரா போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நாட்டின் விட்டுப் போன நடுத்தர வர்கத்தினர் அல்லது ஏழை அல்லாத மக்களை உள்ளடக்குவதற்கான ஒரு முன்னோடி காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSME) பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர்களும் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க | வருமான வரி: விமான டிக்கெட், நகை வாங்குதல், கல்வி தொடர்பான புதிய விதிகள்..!!!
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த திட்டம் தொடர்பான மறு ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
காப்பிட்டு திட்டத்தில் விட்டுப் போன நடுத்தர வர்த்தினருக்கான காப்பிட்டு திட்டத்தில், தானாக முன் வந்து சேரும் திட்டம் சாத்தியமா, அதை எப்படி செயல்படுத்துவது, எந்த வகையான தேர்வுகள் சரியாக இருக்கும் போன்றவை உள்ளிட்ட பல அம்சங்களை ஆராயுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த கூட்டத்தில், AB PM-JAY, கோவிட் -19 தாக்கம், சுகாதார விநியோகத்தில் தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பதற்கான வழிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று சிகிச்சையை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளின் செயல்திறன் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், துப்புறவு பணியாளர்கள், சாலை விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை ஊழியர்கள் ஆகியோருக்கு பலனளிக்கும் வகையில், மத்திய அமைச்சகங்களின் தற்போதைய சுகாதாரத் திட்டங்களுடன் AB PM-JAY உடன் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தியார் நிறுவனங்கள், ஆகியவற்றில் உள்ளவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், எந்தவொரு சுகாதாரத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.