இரத்த அழுத்தத்திற்கு மாதுளை: இந்தியாவில் மிகவும் பொதுவான பழங்களில் ஒன்று மாதுளை. மற்ற பழங்களைப் போலவே இந்தப் பழத்தையும் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். வைட்டமின்கள் பி, சி மற்றும் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் உள்ளன. தினமும் மாதுளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஆன்டி-ஆக்சிடெண்டுகள்
மாதுளை மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது. இது தமனிகளை சுத்தமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது மட்டுமல்ல. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, இரத்த நாளங்கள் அடைபடுவதையும் மாதுளை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாதுளை பயனுள்ளதாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் மூன்று மாதுளம் பழங்களை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை காணலாம். இது மாதுளை உட்கொள்பவரின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதோடு, இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும்.
ஆரோக்கியமான இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு அவசியம்
இதயத்தை பலமாக வைத்திருக்க 3 மாதுளைகளை மட்டும் உட்கொண்டால் போதாது. இதனுடன் வாழ்க்கைமுறையில் தேவையான சில மாற்றங்களைச் செய்தால் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மாதுளை உதவும். இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். இது எடையை பராமரிக்கவும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்னவாகும்? ஷாக் தரும் தீமைகள்
இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும்:
- அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
- டயட்ரி கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துங்கள். பால் மற்றும் பனீர் போன்றவற்றை சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளவும்.
- நட்ஸ் மற்றும் வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பைத் தவிர்க்கவும்.
- உப்பை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். ஏனெனில் உப்பில் அதிக சோடியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- மது அருந்துவதைக் குறைக்கவும். இது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மதுவில் அதிக கலோரிகள் இருப்பதே இதற்குக் காரணம்.
- புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா? நோ டென்ஷன்.. இந்த விதையை சாப்பிடுங்க, உடனே குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ