Amla | எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்

Amla Juice | நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவைப் பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் இளமையாக மாற்றும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2024, 01:40 PM IST
  • ஆம்லா ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள்
  • எலும்புகள் இரும்பு போல் வலுவாகும்
  • உங்களின் இதய ஆரோக்கியம் மேம்படும்
Amla | எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும் title=

Amla Juice Benefits Tamil | நெல்லிக்காய் ஜூஸ் பற்றி நிறைய கேள்விபட்டிருப்பீர்கள், கல்லீரலை சுத்தம் செய்யும், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும் என சொல்லப்பட்டிருக்கும். ஆனால், நெல்லிக்காயில் மறைந்திருக்கும் இன்னொரு ரகசியமும் இருக்கு. இதனை ஜூஸாக்கி தினமும் குடித்து வந்தால் உங்களின் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவாகும். நாள் முழுவதும் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நெல்லிக்காய் சாறு காலை முதல் மாலை வரை வெறும் வயிற்றில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். இரவில் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும். இதன் சுவை குளிர்ச்சியாக இருப்பதால் இரவில் சளி மற்றும் தொண்டை வலியை உண்டாக்கும். 

நெல்லிக்காய் ஜூஸை குளிர்காலத்தில் குடிக்கலாமா?

இப்போது மழைக்காலம் தொடங்கி, குளிரும் சேர்த்து அடிக்க தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால் நெல்லிக்காய் ஜூஸ் (Nellikaai Juice) உடலுக்கு குளிர்ச்சியானது. இந்த நேரத்தில் இந்த ஜூஸ் குடுக்கும்போது சளி வர வாய்ப்பு இருக்கிறது என நினைக்கலாம். உண்மையில் நெல்லிக்காய் ஜூஸ் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் குடிக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல் இரவு நேரத்தில் குடிப்பதை மட்டும் தவிர்த்துவிட வேண்டும். 

நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை

2-3 நெல்லிக்காய்களை எடுத்து, அவற்றைக் கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மிக்சியில் போட்டி நன்கு அரைக்கவும். இப்போது உங்களின் நெல்லிக்காய் ஜூஸ் ரெடி. அதனை எடுத்து வடிகட்டியில் வைத்து வடிக்கட்டிவிட்டு நீங்கள் நெல்லிக்காய் ஜூஸ் (Amla Juice) குடிக்கலாம். புளிப்பு உடன் கூடிய கசப்பு நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும். காரமாக வேண்டும் என்றால் சிறிதளவு மிளகுதூள் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு சுவை வேண்டும் என்றால் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்!

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்

எலும்புகள் வலுவடையும்

நெல்லிக்காய் (Amla) வைட்டமின்கள் நிறைந்துள்ளது என்பது பலருக்குத் தெரியும். ஆனால் அது நல்ல அளவு கால்சியத்தையும் வழங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. சயின்ஸ் டைரக்ட் படி, ஆம்லா சாறு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயில், எலும்புகளின் வலிமை குறைந்து, அவை உடைந்து போகும் அபாயம் அதிகரிக்கிறது.

இளமையான தோற்றம் 

தோலில் இருக்கும் கொலாஜன் வயதுக்கு ஏற்ப குறைகிறது. இதன் காரணமாக, சுருக்கங்கள், புள்ளிகள், வறட்சி, கருமை ஆகியவை எல்லாம் தோலில் தோன்றும். இது உங்களின் வயதான தோற்றத்தை பட்டவர்த்தமான வெளிக்காட்டும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் ஊட்டச்சத்து வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, தோல் இளமை போல் பளபளக்கத் தொடங்கும். மேலும் உங்கள் வயதை மக்கள் யூகிக்க கூட முடியாது.

இதயத்திற்கு ஆரோக்கியம் 

நெல்லிக்காய் சாறு இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சில ஆய்வுகள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஆத்தரோஜெனிக் குறியீட்டைக் குறைக்கிறது என்று தெரிவிக்கின்றன. கொலஸ்ட்ரால் சேராததால், நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதய ஆரோக்கியமும் பராமரிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஆம்லா சாற்றில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலத்தின் விளைவு அதிகரிக்கிறது. இதன் மூலம் நோய்களில் இருந்து விலகி ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News