புதுடெல்லி: கொரோனா வைரஸின் பாதிப்பினால், அலுவலகப் பணிகளும் வீட்டில் இருந்தபடியே செய்யும் நிலைமை வந்துவிட்டது. கல்வியும் ஆன்லைனில் வந்துவிட்டது. எனவே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், உட்கார்ந்தபடியே வேலை செய்வதும் அவசியமாகிவிட்டது. இது உயர் ரத்த அழுத்தத்தைக் கொடுக்கும். அதோடு இருதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா?
ஒரு மேசை, கணினித் திரைக்கு முன்னால் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, வேலை எதுவுமின்றி நீண்ட நேரம் ஆசுவாசமாக உட்கார்ந்திருந்தாலும் சரி, அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
நிற்கும் அல்லது நகரும் போது ஒப்பிடும்போது நமது ஆற்றல் செலாவவதை விட உட்கார்ந்திருக்கும்போது, குறைந்த ஆற்றலே செலவாகிறது. இது பல்வேறு உடல்நலக் கவலைகளை கொடுக்கிறது. உடல் பருமன் என்பது உடனடி தாக்கமாக இருக்கும். உயர் ரத்த சர்க்கரை, இடுப்பைச் சுற்றி அதிகப்படியான உடல் கொழுப்பு படிவது, தொப்பை மேலும் பெரிதாவது என நீண்ட நேரம் உட்காருவதன் பாதிப்பு வெளிப்படும். அதுமட்டுமல்ல, அத்துடன் சேர்த்து இருதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
Also Read | Health: உணவில் அதிக உப்பு சேர்வதை தெரிந்துக் கொள்ள எளிய வழி!
கோவிட் தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் நிலையில், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. அது ஏற்படுத்தும் சுகாதார பாதிப்பு பன்மடங்கு அதிகம் என்பது கொரோனாவின் பக்கவிளைவு என்றும் சொல்லலாம்..
பொதுவாக, மனிதர்கள் நிமிர்ந்து நிற்கும் இயல்புக்கேற்க வடிவமைக்கப்பட்டவர்கள். எனவே அந்த நிலையில் நமது இதயம் மற்றும் உடலின் பிற அமைப்புகள் திறம்பட செயல்படும். மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவர்களின் குடல் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுவதை நினைத்துப் பாருங்கள். இதேபோல், நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
கால் மற்றும் தொடையின் பின்புற தசைகள் (gluteals): நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கால் மற்றும் தொடையின் தசைகள் பலவீனமடைய வழிவகுக்கும். நடைபயிற்சி மூலம் இந்த பெரிய தசைகளை இயக்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தசைகள் பலவீனமாக இருந்தால், நடக்கும்போதோ உடற்பயிற்சி செய்யும்போதோ காயமடயும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் வளர்சிதை மாற்ற சிக்கல்கள்: நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் கொழுப்புகளையும் சர்க்கரையையும் செரிமாணம் செய்ய தசைகளை இயக்க வேண்டியது அவசியம். அதிக நேரம் அமர்ந்திருந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகளும் சர்க்கரையையும் அப்படியே தங்கிவிடும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்.
ALSO READ | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?
இடுப்பு மற்றும் மூட்டு பிரச்சினைகள்: உட்கார்ந்திருப்பது நமது இடுப்பின் நெகிழ்வு தசைகளை செயலிழக்கச் செய்கிறது, இது இடுப்பு மூட்டுகளில் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதிலும் சரியாக உட்காராவிட்டால், அல்லது உட்காரும் நாற்காலி சரியானதாக இல்லாவிட்டால் வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.
புற்றுநோய்: அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால், நுரையீரல், கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, வேலை நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்கவும். அது உங்களுக்கு சோம்பல் தன்மையை ஏற்படுத்தாது என்பதோடு, சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவிசெய்யும்.
Also Read | Sandcastle: இந்த மணல்கோட்டையை எந்த அலையும் அடித்துச் செல்லாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR