இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ளது, வெப்பநிலை 45 ஐ தாண்டி செல்கிறது. இந்த பருவத்தில் அனைவரின் நிலை மோசமாக இருந்தாலும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு சிறப்பு வகை விதைகள் இதற்கு பெரும் நன்மை பயக்கும்.
நீரிழிவு நோயாளிகள் ஆளி விதைகளை ட்ரை செய்யலாம்
2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறன், ஆளி விதையில் உள்ள லிக்னன்களுக்கு உள்ளது. தினந்தோறும் சிறிதளவு ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நெடுங்காலத்திற்கு முறையாக பராமரிக்க முடியும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயால் உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கம் குறையத் தொடங்குகிறது.
இந்த சத்துக்கள் ஆளி விதையில் உள்ளது
ஆளி விதைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, இது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது தவிர, இந்த விதைகளின் நுகர்வு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஈஸ்ட்ரோஜன், லிக்னான்ஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கு, ஆளிவிதைகள் உணவில் சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உடலை மிகப்பெரிய அளவில் பாதுகாத்து ஆரோக்கியமாக்குகிறது. இதில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் டைப் 2 சர்க்கரை நோயையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது மாரடைப்பு, கரோனரி தமனி நோய், டிரிபிள் வெசல் நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், ஆளி விதையை உணவில் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் குறையும்.
ஆளிவிதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
* ஆளி விதைகள் ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும், இது இதய ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆளிவிதையில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் வீக்கத்தைக் குறைத்து, இதயத்தின் இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கிறது.
* ஆளி விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். சுமார் 2 கிராம் நார்ச்சத்து வெறும் 7 கிராம் ஆளிவிதையில் உள்ளது. ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. அதேசமயம் கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
* எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆளி விதைகள் உதவியாக இருக்கும். உண்மையில், ஆளி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை பசி ஏற்படுவதை குறைக்கிறது மற்றும் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் ஆளி விதைகளை சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் எடை, பிஎம்ஐ மற்றும் தொப்பையை குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR