காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. கொரோனா வைரஸைத் தடுக்க, சிலர் தினமும் சூடான நீரை குடித்து வருகிறார்கள். மீண்டும் மீண்டும் சூடான நீரை அதிகமாக உட்கொள்வது பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
* சூடான நீரை (Drinking Hot Water) தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.
* வெந்நீர் தினம் அதிகமாக பருகும் போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
* சூடான நீரை மீண்டும் மீண்டும் குடிப்பதால் உடலின் உள் உறுப்புகள் எரியும் அபாயத்தை உருவாக்க முடியும். உட்புற உடல் உறுப்புகளின் திசுக்கள் மிகவும் உணர்திறன் கொண்டவையாகும். மேலும் அதிக வெப்பநிலை அவற்றை பாதிக்கும் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும்.
ALSO READ | வெந்நீரின் அசத்தும் அற்புத நன்மைகள்: தண்ணீரால் ஆனந்தம், வெந்நீரால் பேரானந்தம்!!
* வெந்நீரானது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தை சேதமடைய செய்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
*அதிக அளவு வெந்நீர் குடிப்பது, ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை நீர்த்து போக செய்து, செல்களில் வீக்கம் தலைவலி, மூளை அழுத்தம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.
*நேரடியாக உணவுக்குழாய் வழியே வரும் வெந்நீரில் பல விதமான தொற்றுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் பல நச்சுகள் உள்ளே போகலாம்.
* தேவையற்ற அளவு சூடான நீரை உட்கொள்வது, குறிப்பாக படுக்கைக்கு முன் குடிப்பது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் சூடான நீர் உங்களை அதிகமாக சிறுநீர் கழிக்கச் செய்கிறது. மேலும் உங்கள் இரத்த நாள செல்கள் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
* சூடான நீரின் அதிகப்படியான நுகர்வு மொத்த இரத்த அளவை அதிகரிக்கிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR