வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்பீர்களா?... உடனே நிறுத்திவிடுங்கள் ஆபத்து அதிகம்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் மக்னீசியம் அளவு அதிகரித்து இதய பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 15, 2022, 11:43 AM IST
  • வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
  • வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இதய நோய்க்கு வழிவகுக்கும்
  • பழங்களை உகந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்
 வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்பீர்களா?... உடனே நிறுத்திவிடுங்கள் ஆபத்து அதிகம் title=

பழங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கக்கூடியவை. ஆனால் எந்தெந்த பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. வாழைப்பழம் பலரால் விரும்பப்படுவது. உடலுக்கு ஏராளமான நன்மைகளை அது தருவதால் மக்களின் உணவு பழக்கத்தில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இருந்தாலும் வாழைப்பழத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல.

வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது. ஆனால் அதில் அமிலத்தன்மையும் இருக்கிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். 

Banana

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதனால். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். 

மேலும் படிக்க | High Cholesterol Warning: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் முகத்தில் இந்த அறிகுறிகள் தோன்றும்

ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்தப் பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நிச்சயம் உடலுக்கு உகந்ததல்ல. அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். எனவே வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.

மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள்

மேலும் படிக்க | Cholesterol Signs: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தென்படும், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News