புதுடெல்லி: கொரோனா குறித்த அச்சம் மீண்டும் வியாபிக்கிறது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு, லாக்டெளன் போன்ற அறிவிப்புகள் வரலாம் என்ற அச்சமும் குறையவில்லை.
கொரோனா புதிய திரிபு உலகெங்கிலும் உள்ள மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் எதிரொலி காணப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், நாம் நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது முக்கியம். அதோடு, உணவு மற்றும் பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
Also Read | நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!
கொரோனாவின் சில அறிகுறிகளை கண்டு ஏற்படும் அச்சமும் பெரிய அளவில் வேதனை அளிப்பது. தற்போது, சளி-இருமல், உடல் வலி, காய்ச்சல் தலைவலி ஆகியவை வந்தாலே அனைவருக்கும் வயிற்றைக் கலக்குகிறது. ஆயுர்வேதம் இதுபோன்ற உபாதைகளுக்கு நல்ல தீர்வை வைத்திருக்கிறது.
'சுதர்சனம்' மாத்திரை மற்றும் 'தாலிசாதி' சூரணம் போன்ற மருந்துகள் கப ஜுரம் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றவை.
மூக்கரட்டி சாரை அல்லது மூக்கிரட்டை (Boerhavia diffusa) பொதுவாக இளமையை அதிகரிக்கும் மூலிகை என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை வேரின் சாற்றை இரண்டு முதல் மூன்று மாதங்கள் பாலுடன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டால் உடல் வலிமையும் கூடும், நோய் எதிர்ப்பு சத்தும் அதிகரிக்கும்.
மூக்கரட்டி சாரையின் வேர்களை பாலுடன் வேகவைத்து குடிப்பதால் காய்ச்சல் உடனடயாக குணமாகும்.
Also Read | இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில், கோபம் எப்போது குறையும் Covid?
கல்லீரலில் வீக்கம் வந்தால், இதன் வேர் (3 கிராம்) மற்றும் முருங்கை அல்லது பட்டை (4 கிராம்) தண்ணீரில் கொதிக்க வைத்து நோயாளிக்கு வழங்கினால், அது உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.
துளசியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல நோய்களை நம்மிடம் இருந்து விலக்கி வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துளசி மிகவும் உதவியாக இருக்கும்.
தினசரி நான்கைந்து துளசியின் இலைகளை ஒரு ஸ்பூன் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராட துளசி உறுதுணையாக இருக்கிறது. வெறும் வாயில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்தை கூட்டுகிறது.
ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR