IPL 2025 Mega Auction Latest News Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவ. 24 மற்றும் நவ.25 ஆகிய இரண்டு தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் எடுத்துள்ளன.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்டை (Rishabh Pant) ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது. ஏலத்தின் போது ரிஷப் பண்டை எடுக்க பல அணிகள் ஆர்வம் காட்டினாலும் லக்னோ அணி கடுமையாக முயற்சித்தது. இருப்பினும், 20.75 கோடியில் லக்னோ தன் வசம் ரிஷப் பண்டை வைத்திருந்தபோது, டெல்லி அணி அதன் RTM ஆப்ஷனை பயன்படுத்தியது.
எல்எஸ்ஜி கேப்டனா ரிஷப் பண்ட்?
தொடர்ந்து, புதிய விதியின்படி லக்னோ அணி (Lucknow Super Giants) இறுதித்தொகையாக ரூ.27 கோடி என அறிவிக்க, அந்த தொகையை லக்னோ அணி ஏற்க மறுத்தது. இதன்கீழ், ரூ.27 கோடிக்கு லக்னோ ரிஷப் பண்டை தூக்கியது. 2025இல் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் கையில் எவ்வளவு கிடைக்கும்?
அந்த வகையில், ரிஷப் பண்டுக்கு தற்போது ஒரு சீசனுக்கு ரூ.27 கோடி கிடைக்கும் நிலையில், இதில் அவரின் கைகளுக்கு மொத்தம் எவ்வளவு செல்லும் என்பதை சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ரிஷப் பண்டுக்கு ரூ.27 கோடி மொத்தமாக கிடைக்காது. சில வரி பிடித்தம் ஆகியவைக்கு (Rishabh Pant IPL 2025 Salary Breakup) பின்னர்தான் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடருக்கு தனியே போட்டித் தொகையும் இருக்கிறது. இது அந்த வீரரின் ஒரு சீசனுக்கான தனிப்பட்ட சம்பளத் தொகை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரிஷப் பண்ட்டுக்கு தற்போதைய ஏலத்தின் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு ஒரு சீசனுக்கு ரூ.27 கோடியாகும். இந்திய அரசின் விதியின்படி 8.1 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதனால், அவருக்கு ஒரு சீசனுக்கு ரூ.18.9 கோடி கிடைக்கும். இருப்பினும் இந்த வரி பிடித்தம் கணக்கீடு அவரின் மொத்த ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஐபிஎல் போட்டி தொகை எவ்வளவு...?
ஐபிஎல் தொடரில் நீங்கள் ஒரு போட்டியில் பிளேயிங் லெவனிலோ அல்லது இம்பாக்ட் வீரராகவோ விளையாடினால் ரூ.7.5 லட்சம் போட்டித் தொகையாக கிடைக்கும். இது அவரின் ஒட்டுமொத்த சம்பள ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். 14 போட்டிகளில் நீங்கள் விளையாடினால் ரூ.1.05 கோடி கிடைக்கும். அதேபோல், இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஆண்டு ஒப்பந்தத்தில் ரிஷப் பண்ட் B கிரேடில் இருக்கும் ரிஷப் பண்ட் ஒரு ஆண்டுக்கு ரூ.3 கோடியை பெறுவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ