சோம்பு சாபிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோம்பு அதாவது பெருஞ்சீரகம் சாப்பிடுவதன் பயன் பற்றி உங்களுக்கு தெரியுமா?. 

Last Updated : Nov 27, 2017, 04:05 PM IST
சோம்பு சாபிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?  title=

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பு அதிக மருத்துவ குணம் நிறைந்தது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் பயன்களை காண்போம்.

சோம்பு சாப்பிடுவதன் நன்மை: 

சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும். 

சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும். 

தூக்கத்தைச் சீராக்கும். சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சோம்பு எவ்வ;அவு நன்மை தரும் என்பதை கண்டோம். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Trending News