Benefits Of Bitter Guard Juice: பாகற்காய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறிகளுள் ஒன்று. பலர் அதன் சாற்றையும் குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். மறுபுறம், பாகற்காய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஏனெனில் இது உங்கள் உடலுக்கு நன்மை செய்யும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒவ்வாமை (Allergy) எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம். பாகற்காய் சாறை குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மறுபுறம், நீங்கள் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றைக் குடித்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், உங்கள் மனமும் கூர்மையாக மாறும். அதனால் தான் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும்.
நீரிழிவுக்கு நல்லது
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், பாகற்காயை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த சாறு, ரத்த சர்க்கரைக் குறைப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலும் படிக்க | முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழைப்பழம்!
செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது
பாகற்காயை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது. பாகற்காய் சாறு குடிப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராது. எனவே, நீங்கள் ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பாகற்காய் சாற்றை உட்கொள்ளலாம்.
எடை கட்டுப்பாட்டில் இருக்கும்
நீண்ட நாட்களாக உடல் எடையை குறைக்க நினைத்தால், வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பாகற்காய் சாறு பசியைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நீங்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ