COVID -19: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் எது தெரியுமா..!!!

ஐந்தாம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களுடன் உணவகங்கள், மால்கள், பள்ளிகள், சினிமா அரங்குகள் ஆகியவை இந்தியாவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2020, 10:40 AM IST
  • ஐந்தாம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், கடுமையான COVID-19 வழிகாட்டுதல்களுடன் உணவகங்கள், மால்கள், பள்ளிகள், சினிமா அரங்குகள் ஆகியவை இந்தியாவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
  • கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும், மாநிலத்தில் குணமடையும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக இறப்பு எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகிறது.
COVID -19: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் எது தெரியுமா..!!! title=

புதுடெல்லி: இந்தியாவில் ஐந்தாம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில்,  பொது இடங்களை மீண்டும் மக்கள் புழக்கம் அதிகரித்து வருவதை அடுத்து ​​நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 70,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11, 2020) 70 லட்சத்தை தாண்டியது; இறப்பு எண்ணிக்கை 108334 ஆக உள்ளது.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. மாநிலங்களின் பட்டியலில் - மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மற்றும் தமிழ்நாடு ஆகியவை அடங்கும்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்து COVID காரணமாக மகாராஷ்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

மாநிலங்களுக்கு நிதி, மருத்துவ பொருட்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் மத்திய குழுக்களை அனுப்புவதன் மூலம் பொது சுகாதார அமைப்பை மத்திய அரசு பலப்படுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

ALSO READ | மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும், மாநிலத்தில் குணமடையும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக இறப்பு எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகிறது. இந்த மாநிலங்கள் அவற்றின் செயல்திறனில் படிப்படியாக முன்னேற்றம் காண்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலங்களில், ஆந்திராவில் குணம்டையும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆந்திராவில் குணமடையும் சதவீதம் 93 ஆகவும், தமிழகம் 91.7 சதவீதமாகவும் உள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,53,807 ஆக உள்ளது. அவற்றில் 8,67,496 பேர் ஆக்டிவ் நோயாளிகள். 60,77,977 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடையும் விகிதம் 86.17 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை COVID-19 பரிசோதனை மொத்தம் 8,68,77,242 பேருக்கு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

ALSO READ | திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்ற்கு எதிராக 7  MLAக்கள்  போர்கொடி.. பதவி தப்புமா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News