வெள்ளை முடி: அழகான மற்றும் அடர்த்தியான முடி யாருக்கு பிடிக்காது? அனைவரும் தங்கள் தலைமுடி நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இளநரை வந்துவிடுமோ என்று அச்சப்படும் இளைஞர்களும் அதிகம்.
பெண்கள் குறிப்பாக நீளமான, கருமையான, பட்டு போன்ற கூந்தலை விரும்புகிறார்கள். ஆனால், பிஸியான வாழ்க்கை முறையால், உடல் ஆரோக்கியத்துடன், தலைமுடியை கவனிக்க முடியாமல், டென்ஷன், மனச்சோர்வு போன்றவற்றால், முடி கொட்டுவது அதிகமாகிறது. இதனால், சிரமப்படுபவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
எனினும், பல வித ரசாயனங்களை பயன்படுத்தி செய்யப்படும் இந்த முயற்சிகளால், ஆதாயங்களை விட தொந்தரவுகளே அதிகமாக உள்ளன. இயற்கையான நிரந்தர தீர்வை காண விரும்புபவர்கள் உங்கள் கூந்தலில் வெங்காய எண்ணெயை தடவலாம். இது உங்கள் முடியின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். வெங்காய எண்ணெய் மூலம், முடி பிரச்சனையில் இருந்து விடுபட்டு, தலைமுடியை எப்படி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது என இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | கோடையில் ஆண்கள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
வெங்காய எண்ணெயை தலைமுடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்
இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காய எண்ணெயை தடவுவது நன்மை பயக்கும். வெங்காய எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால், அது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது முடியை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறது.
வெள்ளை முடிக்கு நிவாரணம்
வெங்காய எண்ணையை தொடர்ந்து தடவினால் கூந்தல் நன்றாக இருக்கும். மேலும் அதில் உள்ள கந்தகம் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது முடி உதிர்வு முதல் பிளவு முனை வரை நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, இது முடியின் இயற்கையான pH ஐ பராமரித்து, முடியை அடர்த்தியாக மாற்றும் வேலையை செய்கிறது. இந்த எண்ணெய் பிஹெச் அளவை பராமரிப்பதன் மூலம், முடி வெள்ளையாக மாறாமல் பாதுகாக்கிறது.
முடி உதிர்வதை நிறுத்துகிறது
வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவது முடி உதிர்வைக் குறைக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்வதைத் தடுக்கும் என்சைம்களை செயல்படுத்துகிறது. ஆகையால் இந்த எண்ணெயை பயன்படுத்தினால், அது கூந்தலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். இதில் உள்ள கந்தகம் உச்சந்தலையை ஆரோக்கியமாக்குகிறது. இது கூந்தலை வலுவூட்டுகிறது, முடி உதிர்வதையும் தடுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Health News: முருங்கையின் மகத்தான மருத்துவ குணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR