எச்சரிக்கை.... கூந்தலுக்கான சலூன் சிகிச்சைகள்... புற்று நோயை ஏற்படுத்தலாம்

Side Effects of Hair Treatments: புதிய எச்சரிக்கை ஒன்று கூந்தலுக்கான சிகிச்சையின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளது. கூந்தலுக்கான பல சிகிச்சைகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2025, 03:14 PM IST
  • புதிய எச்சரிக்கை கூந்தலுக்கான சிகிச்சையின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளது.
  • கூந்தலுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல் நலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • இயற்கையான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் பாதுகாப்பானது.
எச்சரிக்கை.... கூந்தலுக்கான சலூன் சிகிச்சைகள்... புற்று நோயை ஏற்படுத்தலாம் title=

இன்றைய ஃபேஷன் மற்றும் அழகு காலத்தில், முடி பராமரிப்புக்கான சலூன் சிகிச்சைகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. அழகான மற்றும் ஸ்டைலான கூந்தலைப் பெறுவதற்காக சலூனில் பலவிதங்களில் வழங்கப்படும் சிகிச்சைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே, சுருள் முடியை நேராக்க, கர்லிங் செய்ய, ஹேர் டை மற்றும் பிற சலூன் சிகிச்சைகள் பொதுவானதாகிவிட்டன. இந்நிலையில், ஒரு புதிய எச்சரிக்கை இந்த சிகிச்சையின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளது. கூந்தலுக்கான பல சிகிச்சைகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடல் நலத்தில் கடுமையான பாதிப்பு

ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் மற்றும் டையிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் கெமிக்கல்களில் சில ஆபத்தான கூறுகள் இருப்பதாகவும், அவை நாளடைவில் உடலில் தேங்கி புற்றுநோயை உண்டாக்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். டையை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு பளபளப்பும் அழகும் கிடைக்கிறது. ஆனால் அதில் உள்ள ரசாயனங்கள் உடலுக்குள் சென்று உடல் நலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சையில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்

ஆராய்ச்சி ஒன்றில், கூந்தலுக்கான சாயத்தில் (அம்மோனியா மற்றும் பாரஃபின் போன்றவை) காணப்படும் பல இரசாயனங்கள் சருமத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்து செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டது. இது தவிர, முடி நேராக்குதல் போன்ற மற்ற சலூன் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைட் போன்ற இரசாயனங்கள் உடலுக்கு ஆபத்தானவை.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் இந்த மசாலா பொருட்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம்!

 புற்றுநோயின் அபாயம் பெருமளவு அதிகரிக்கும் ஃபார்மால்டிஹைட் என்னும் ரசாயனம்

ஃபார்மால்டிஹைட் என்னும் ரசாயனம் முடியை நேராக்க மற்றும் மென்மையாக்க பயன்படுகிறது. இது உச்சந்தலையில் உள்ள எபிடெர்மல் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். இதனால், புற்றுநோயின் அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது. இது தவிர, இந்த இரசாயனங்கள் வெளியிடும் வாயு மற்றும் மணத்தை மூக்கின் மூலம் உடலுக்குள் செல்வதால், போது சுவாச பிரச்சனைகள் ஏற்படலா. இது தவிர சருமத்தில், தடிப்புகள், வீக்கம் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.

இயற்கை பொருட்களைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது

கூந்தலுக்கான சிகிச்சைக்கு முன், பயன்படுத்தப்படும் பொருட்கள் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். மேலும், கூந்தல்களுக்கான சிகிச்சையை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி புதிய, இயற்கையான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News