Self Help Books To Read In 2025 : புத்தாண்டு தொடங்கி விட்டது. இந்த ஆண்டில் நாம் 12 மாதங்களுக்கு 12 புத்தகங்களை படித்தால், வாழ்வில் கண்டிப்பாக ஒரு தெளிவு பிறக்கும். அப்படி படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன தெரியுமா?
Self Help Books To Read In 2025 : புத்தாண்டு தொடங்கிய பின்பு, ‘இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்’ என நாம் சில திட்டங்களை தீட்டி வைத்திருப்போம். அவற்றுடன் சேர்த்து பலர் கண்டிப்பாக புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற திட்டத்தையும் வைத்திருப்போம். அப்படி, வாசிப்பை மேம்படுத்தவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் சில புத்தகங்கள் உதவும். அப்படி, ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரை 12 மாதங்களுக்கு 12 புத்தகங்கள் என்ற எண்ணிக்கையில், எந்தெந்த புத்தகங்களை படிக்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பலருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கும். கதை புத்தகங்களாக இருந்தாலும், கதை அல்லாது கருத்து புத்தகங்களாக இருந்தாலும் அவை நம்மை கடத்தி வேறு ஒரு உலகிற்கு கொண்டு செல்பவையாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும், வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒன்றாகும். எனவே, இந்த வருடத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய 12 புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஜனவரி: அட்டாமிக் ஹேபிட்ஸ் நற்பழக்கங்களை வளர்த்து, தீய பழக்கங்களை குறைக்க உதவும் புத்தகம் இது. பிப்ரவரி: தி அல்கெமிஸ்ட் உங்கள் கனவுகளை துரத்த உங்களுக்கு தூண்டுகோளாக உதவும் புத்தகம் இது.
மார்ச்: இக்கிகை ஜப்பானியர்களால் எழுதப்பட்டு பல மொழியில் இருக்கும் இந்த புத்தகம் உங்களுக்கு வாழ்வியல் பாடங்களை உணர்த்தும். ஏப்ரல்: டேரிங் கிரேட்லி நமக்குள் இருக்கும் பலத்தை நமக்கே காண்பிக்கும் புத்தகம் இது.
மே: திங் லைக் அ மாங்க் வாழ்விலும் மனதிலும் அமைதி அடைய வழி காட்டும் புத்தகம் இது. ஜூன்: தி மிட்நைட் லைப்ரரி வாழ்வில் நீங்கள் எத்தனை வடிவம் எடுத்தாலும், உங்களுக்கு பிடித்தது எது என தேர்ந்தெடுக்க உதவும் புத்தகம் இது.
ஜூலை: பார்ன் அ க்ரைம் மன உறுதியை, நகைச்சுவையான முறையில் கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது. ஆகஸ்ட்: அ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் ஹூமன் கைண்ட் மனிதனின் பரிணாம வளர்ச்சியை வரலாற்றின் கண்கொண்டு பார்க்க வைக்கும் புத்தகம் இது.
செப்டம்பர்: தி புக் தீஃப் உலகப்போர் 2வின் போது நடந்த விஷயங்களை காண்பிக்கும் புத்தகம் இது. அக்டோபர்: கிரியேடிவ் லிவ்விங் பியாண்ட் ஃபியர் படைப்பாற்றலை எப்படி போற்ற வேண்டும் என கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது.
நவம்பர்: மெடிட்டேஷன்ஸ் இதில், என்றும் அழியாத வாழ்க்கை பாடங்களை இந்த புத்தகத்தின் எழுத்தாளர் மார்கஸ் சொல்லிக்கொடுக்கிறார். டிசம்பர்: அ கிரிஸ்மஸ் கேரோல் இந்த கதை, மன்னிப்பை பற்றியது. கடைசி மாதத்தில் நன்றியுடன் இந்த வருடத்தை முடிக்க உகந்த புத்தகம் இது.