எப்பவும் சோர்வா இருக்கா... உடனடி ஆற்றலை கொடுக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள் இதோ!

நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2022, 08:37 PM IST
  • தினமும் உணவுடன் சிறிது நெய் சாப்பிடவும்.
  • வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எப்பவும் சோர்வா இருக்கா... உடனடி ஆற்றலை கொடுக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள் இதோ! title=

நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

உடனடி ஆற்றல் கிடைக்க உணவில் சேர்க்க வேண்டியவை:

பருப்பு வகைகள் 

பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, இவற்றை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சோர்வு மற்றும் பலவீனத்தை அகற்ற, உங்கள் உணவில் பருப்பு வகைகளை சேர்க்க மறக்காதீர்கள். 

நெய் 

தினமும் உணவுடன் சிறிது நெய் சாப்பிடவும். நெய் சாப்பிடுவதால் சோர்வு நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாதத்துடன் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், பாலில் நெய் சேர்த்து அருந்தலாம்.அதிக ஆற்றல் தேவைப்படும் குழந்தைகளுக்கு நெய் ஊற்றி பருப்பு சாதம் கொடுப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரகம் ஆபத்தான நிலையில் உள்ளதை காட்டும் ‘சில’ அறிகுறிகள்!

பழங்கள் மற்றும் காய்கறிகள் 

பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள். வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குவதோடு மட்டுமல்லாமல், ஆற்றலைத் தக்கவைக்க உதவும். 

புதினா  

புதினாவை உணவில்  சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த வெவ்வேறு வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். தலைவலி மற்றும் பருவகால காய்ச்சல்களில் இருந்து விடுபடவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பில் இருந்து தப்பிக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

மஞ்சள்

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும். உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதால் மஞ்சளை உணவில் சேர்ப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.  மஞ்சள் பால் அருந்துவதும் நல்ல பலன் தரும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert: ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்திடம் இருந்து விலகியே இருங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News