புதுடெல்லி (New Delhi) : மார்ச் மாதத்தில் கொரோனா ( Corona) வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் தொடங்கியதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்புரை அறுவை சிகிச்சைகள் , அதாவது கேட்ராக்ட் சர்ஜரி (Cataract surgery) மெதுவாக மீண்டும் தொடங்குகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கண்புரை மற்றும் பிற கண் நோய்களுக்கான பரிசோதனை, தேவையான அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.
பாதுகாப்பான கண் மருத்துவ நடைமுறைகள் குறித்த அதன் சமீபத்திய வழிகாட்டுதல்களில், சமூக இடைவெளி, முறையான சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிய பின்னரே, கண்புரை அதாவது Cataract மற்றும் பிற கண் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கேட்ராக்ட் அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அபாயிண்மெண்ட் அடிப்படையில், முன் கூட்டியே நேரத்தை நிர்ணயித்து அழைத்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் சுமார் 80 லட்சம் மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
கண்பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில், கண்புரை நோய் அதாவது கேட்ராக்ட் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என கண் நோயை கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் (NPCB) மூலம் பெற்ற தரவுகள் கூறுகின்றன. கேட்ராக்ட் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 63% பேர் பார்வையற்றவர்கள் என அந்த தரவுகள் மேலும் கூறுகின்றன.
காட்ராக்ட் அறுவை சிகிச்சைக்கு முன்னர் கோவிட் -19 பரிசோதனையை நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று அரசு கூறியுள்ளது. ஆனால் நோயாளிக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என்ற வகையில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகல் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் கண் சிகிச்சை மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இருப்பினும், உடனடியாக கண்ணிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது போன்ற அவசர நிலை உள்ளதா என்பதை தீர்மானித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கண் மருத்துவர்கள், கண் சிகிச்சைக்கான உதவியாளர்கள், செவிலியர்கள், கண் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களிடையே கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைக் குறைக்கும் நோக்கில் அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | ரொம்ம்ப சோர்வா இருக்கீங்களா? இதை மொதல்ல செக் பண்ணுங்க…!!!
கொரோனா பரவல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவைக் கண்டன. கண் புரை காரணமாக முழுமையாக பார்வை பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கண் சிகிச்சை பெறலாம் என கூறீய மருத்துவர்கள், எனினும் சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பவர்கள், சிறிது தள்ளிப்போடவே நினைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சகம் கண் தானம் செய்வதை ஊக்குவித்து வரும் நிலையில், கண் தானம் செய்வதற்கும் இந்த தொற்றுநோய் பரவல் தொடர்ந்து தடையாக உள்ளது.
ALSO READ | செப்டம்பர் 4 வரை சென்னையில் குழந்தைகளுக்கான Vitamin-A Camps: விவரம் உள்ளே!!