உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த ஜூஸை கண்டிப்பா குடிக்கணும்

Vegetable Juice Good For High Blood Pressure:  இரத்த அழுத்தம் என்பது மூளையில் இரத்தக்கசிவுக்கு வழிவகுக்கும் ஒரு நோயாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2022, 02:42 PM IST
  • இந்த ஜூஸை உட்கொள்ள வேண்டும்
  • இரத்த அழுத்தம் என்பது மூளையில் இரத்தக்கசிவுக்கும் வழிவகுக்கும்
  • இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த ஜூஸை கண்டிப்பா குடிக்கணும் title=

இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதுபோன்ற சூழ்நிலையில், அவை உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது, அதே போல் மக்கள் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாகிவிட்டதால் அவர்களால் தங்களை கவனித்துக்கொள்ள முடியவதில்லை. இதனால் உடலில் பலவித  நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக மாரடைப்பு, இரத்த அழுத்தம், இரத்த சோகை, மூளை நோய் போன்றவை ஏற்படும். 

பொதுவாக இரத்த அழுத்தம் என்பது மூளையில் இரத்தக்கசிவுக்கும் வழிவகுக்கும் ஒரு நோயாகும். இதை நாம் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கிறோம். இரத்தத்தை பம்ப் செய்வதில் இதயம் அதிக அழுத்தத்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது, இது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம் 

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இந்த ஜூஸை உட்கொள்ள வேண்டும்

ஓமத் தண்ணீர்: ஓமம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது இந்திய சமையலறையில் எளிதில் கிடைக்கும் மூலிகையாகும். ஆயுர்வேதத்தின் படி, இது அனைத்து வகையான நோய்களையும் அகற்றும் திறன் கொண்ட ஒரு மருந்தாகும். ஓமத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். வைட்டமின் கே, பொட்டாசியம், வைட்டமின் பி6, ஃபோலேட் போன்ற பல வகையான ஊட்டச்சத்து கூறுகள் இதில் காணப்படுகின்றன, இந்த கூறுகள் அனைத்தும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

கீரை சாறு: கீரை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், அதில் பொட்டாசியத்தின் நல்ல ஆதாரம் உள்ளது, இது உடலுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் பொட்டாசியம் காரணமாக, இரத்த ஓட்டம் சரியாக செய்யப்படுகிறது, இது இதயத்திற்கு அழுத்தம் கொடுக்காது. உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் கீரை சாறு உங்களுக்கு நன்மை பயக்கும்.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது, இதில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்தான கூறுகள் காணப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

தக்காளி ஜூஸ்: தக்காளி ஒவ்வொரு சமையலறையிலும் காணப்படும் ஒரு காய்கறி ஆகும், இதில் வைட்டமின் சி, ஏ போன்ற பல சத்தான கூறுகள் உள்ளன, மேலும் இதில் பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட தக்காளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News