இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்

Oil for Hair Care: சில இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையை வறட்சியடையாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதற்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2022, 04:57 PM IST
  • வேப்பெண்ணெய் முடியின் வறட்சியை நீக்கி, அவற்றில் பொடுகு வராமல் தடுக்கிறது.
  • நல்லெணெயில் அதிக கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது முடியின் வறட்சியை நீக்குகிறது.
  • தேங்காய் எண்ணெயை அனைத்து பருவங்களிலும் கூந்தலில் தடவலாம்.
இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும் title=

இளநரை பிரச்சனைக்கு தீர்வு: பெரும்பாலான மக்கள் முடி உதிர்தலாலும், வெள்ளை முடியாலும் சிரமப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கு மாசுபாடு, சீரற்ற உணவு, தூக்கமின்மை எனப் பல காரணங்கள் உள்ளன. 

எனினும், இவை அனைத்தையும் தவிர, கூந்தலில் பொதுவாக ஏற்படும் மற்றொரு பிரச்சனையும் உள்ளது. அது பொடுகுப்பிரச்சனை ஆகும். இதன் காரணமாக முடியின் ஆரோக்கியம் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இதன் காரணமாகவும் இளநரை ஏற்படுகின்றது. 

இந்த 3 இயற்கை எண்ணெய்கள் கூந்தலுக்கு சிறந்தது

பொடுகு பிரச்சனையை தவிர்க்க 3 இயற்கை எண்ணெய்கள் மிகவும் நல்ல பலனைத் தரும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த எண்ணெய்கள் முடி உதிர்தல் மற்றும் நரைப்பதைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். 

இந்த எண்ணெய்கள் உச்சந்தலையை வறட்சியடையாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதற்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கின்றன. இரண்டு வாரங்கள் இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தினால், தெளிவான வித்தியாசத்தை கண்கூடாகக் காணலாம். 

கூந்தலுக்கு நன்மை பயக்கும் அந்த எண்ணெய்களை பற்றி காணலாம்

1. வேப்ப எண்ணெய்

- முதலில் இந்த எண்ணையை தயாரிக்க காய்ந்த வேப்பிலையை நைசாக அரைக்கவும்.

- இப்போது அதில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

- பின்னர் அதை முடியின் வேர்களில் தடவவும்.

- 1 முதல் 2 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு முடியை கழுவ வேண்டும். 

- இப்படி செய்தால், பொடுகு வராது, முடி கொட்டாது, நரைக்காது. 

நன்மைகள்: 

வேப்பெண்ணெய் ஒரு இயற்கையான எண்ணெயாகும். இது முடியின் வறட்சியை நீக்கி, அவற்றில் பொடுகு வராமல் தடுக்கிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். வேம்புக்கு பூஞ்சை எதிர்ப்பு குணம் உள்ளது, இது பல பிரச்சனைகளில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரக ஆரோக்கியத்துக்கு எலுமிச்சை சாறு அருமருந்தாக இருக்கும் 

2. தேங்காய் எண்ணெய்

- சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். 

- பின்னர் வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைக்கவும்.

- இப்போது அதில் வெங்காய சாறு சேர்க்கவும்.

- பின்னர் அந்த எண்ணெயை கூந்தலில் தடவிக்கொள்ளுங்கள்.

நன்மைகள்:
தேங்காய் எண்ணெயை அனைத்து பருவங்களிலும் கூந்தலில் தடவலாம். தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை கலந்து தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். தேங்காய் எண்ணெய் முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

3. நல்லெண்ணெய்

- நல்லெண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை கூந்தலில் தடவி ஊறவும்.

- சில நாட்களில், முடியின் ஆரோக்கியத்தில் வேறுபாடு தெளிவாகத் தெரியும்.

நன்மைகள்:

நல்லெணெயில் அதிக கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது முடியின் வறட்சியை நீக்குகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | டீ குடிக்கும்போது இதை மட்டும் சாப்பிடவே கூடாது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News