எடை இழப்பில் சியா விதைகள் உதவும், ஆனால்..... இதை மறந்தால் ஆபத்து!!

Chia Seeds For Weight Loss:சியா விதைகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றைச் சற்றும் யோசிக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால், கலோரி அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் குலைந்து போகலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2024, 10:05 AM IST
  • ஒரே நேரத்தில் அதிக சியா விதைகளை உட்கொள்ளக்கூடாது.
  • சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சிவிடும்.
  • ஆகையால் அவற்றை எப்போதும் அதிக தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும்.
எடை இழப்பில் சியா விதைகள் உதவும், ஆனால்..... இதை மறந்தால் ஆபத்து!! title=

Chia Seeds For Weight Loss: இன்றைய நவீன உலகில் உடல் பருமன் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க நாம் பல வித வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துகிறோம். இவற்றில் சியா விதைகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் எடை இழப்பு முயற்சியில் பலர் இதை பயன்படுத்துகிறார்கள். இது ஒரு பிரபலமான எடை இழப்பு உணவாக மாறிவிட்டது.

சியா விதைகள் (Chia Seeds) சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் இருப்பதால் இவை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றன. 

எடை இழப்புக்கு சியா விதைகள்

சியா விதைகள் பெரும்பாலும் எடை இழப்புக்கான ஒரு இயற்கையான மற்றும் சுலபமான வழியாக பார்க்கப்படுகின்றன. இதை பறி இந்நாட்களில் சமூக ஊடகங்களிலும் பல வித செய்திகள் வருவதை பார்கிறோம். இதை சாப்பிட்டால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம் என பலர் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இது உண்மையா? சியா விதைகள் எடையை குறைக்க உதவுமா?

சியா விதைகளை பொதுவாக தண்ணீரில் ஊறவைத்து பலர் உட்கொள்கிறார்கள். சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. 

மேலும் படிக்க | உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறதா... இந்த 7 உணவுகளை சாப்பிடுங்கள்

சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.இதன் காரணமாக இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைக்க உதவுகிறது. இதனால் அவ்வப்போது தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதன் காரணமாக அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு எடை குறையும் என்று நம்பப்படுகிறது. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) சியா விதைகள் உதவும் என்றாலும், எடையை குறைக்க சியா விதைகளை சாப்பிடுவது மட்டும் போதாது. எடை இழப்புக்கு இன்னும் சில முக்கியமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கலோரி: சியா விதைகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றைச் சற்றும் யோசிக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால், கலோரி அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் குலைந்து போகலாம். ஆகையால் இதை சரியான அணவில் உட்கொள்வது மிக அவசியம்.

நார்ச்சத்து: சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், அவை உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும். ஆனால் எடை இழப்புக்கு இது மட்டும் போதாது. போதுமான உடற்பயிற்சிகளை செய்வதுடன் பிற சமச்சீர் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

ஆய்வுகள்: சியா விதைகள் எடை இழப்புக்கு எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பது குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் கலவையானவையாக உள்ளன. சில ஆய்வுகள் சியா விதைகள் எடை இழப்புக்கு உதவும் என்று கண்டறிந்துள்ளன. ஆனால், மற்ற ஆய்வுகளில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?

உணவில் சியா விதைகளை சேர்க்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்: 

- சரியான அளவு: ஒரே நேரத்தில் அதிக சியா விதைகளை உட்கொள்ளக்கூடாது.
- தண்ணீருடன் சாப்பிட வேண்டும்: சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சிவிடும். ஆகையால் அவற்றை எப்போதும் அதிக தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். 
- சமச்சீர் உணவு: சியா விதைகளுடன், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதும் அவசியம்.
- பிற உணவுகளுடன் சியா விதைகள்: சியா விதைகளை தயிர், ஸ்மூத்தி, சாலட் அல்லது கஞ்சியில் கலந்து சாப்பிடலாம்.

சியா விதைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவை உடல் எடையை குறைக்க கண்டிப்பாக உதவும். ஆனால், எடை இழப்புக்கு இவை மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பப்பாளி பழத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்... வலுவான 10 காரணங்கள் இதோ...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News