Weight Loss Tips: உடல் பருமன், குறிப்பாக தொப்பை கொழுப்பு இந்த நாட்களில் மிக மோசமான ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. ஒரு முறை தொப்பை மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. இதனால் நமது ஆளுமை கெடுவதோடு மட்டுமல்லாமல், நமக்கு பக வகையான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் தொப்பை கொழுப்பின் (Belly Fat) பெரும் பிரச்சனை உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு வயிறு மட்டும் மிக பெரிதாக இருக்கும். மருத்துவ அறிவியலின் படி, உடலின் மற்ற பகுதிகளில் காணப்படும் கொழுப்பை விட தொப்பை கொழுப்பு உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வயிற்றில் உள்ள கொழுப்பால் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.
உடல் பருமன் ஒன்றிரண்டு மட்டுமல்ல பல நோய்களுக்குக் காரணமாகின்றது. ஆகையால் தொப்பை கொழுப்பை உடனடியாக சரி செய்வது மிக அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை அகற்றலாம். அதில் ஒரு வகை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bottle Gourd Juice: உடல் பருமனை குறைக்க உதவும் சுரைக்காய் சாறு
சுரைக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு காயாக கருதப்படுகின்றது. இதில் நார்ச்சத்தும், அதிக அளவு நீர்ச்சத்தும் உள்ளது. இது உடல் பருமனை குறைக்க பெரிய அளவில் உதவுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் சுரைக்காய் சாற்றை உட்கொள்ளலாம் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், சுரைக்காய் சாறு அருந்திய பின்னர் உடற்பயிற்சி செய்வது நல்லது.
காலையில் சுரைக்காய் சாறு குடிப்பதன் பலன் சில நாட்களிலேயே தெரியத் தொடங்கும். 100 கிராம் சுரைக்காய் சாற்றில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆகையால் சுரைக்காய் சாறு குடிப்பதால், கலோரிகள் அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன. இது தவிர, இதில் அதிக அ:ளவில் நார்ச்சத்து இருப்பதால், இதனால் உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு கிடைக்கின்றது.
காலையில் சுரைக்காய் சாறு குடிப்பதால் அவ்வப்போது எடுக்கும் பசி குறைகிறது. இதன் காரணமாக தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
இது மட்டுமின்றி சுரைக்காய் வயிற்றை முழுமையாக சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. இது வயிற்றில் செரிமான செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக கலோரி மேலாண்மை சிறப்பாக மாறுகிறது.
சுரைக்காய் சாறு செய்வது எப்படி?
சுரைக்காய் சாறு. கறி, கூட்டு என பல வழிகளில் உட்கொள்ளப்படுகிறது. சாறு செய்ய, சுரைக்காயை தோல் உரித்து, துண்டுகளாக நறுக்கி ஜூஸரில் போட்டு சாறு எடுக்கவும். சாறு தயாரானவுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றை சுவைக்கு ஏற்ப அதில் சேர்க்கலாம். இந்த சாறு தயார் செய்தவுடன் உடனே குடித்துவிட வேண்டும். இல்லையென்றால் இது ஆக்சிடைஸ் ஆகிவிடும். இதன் காரணமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ