India COVID-19 Update: 53,370 புதிய பாதிப்புகள்; மொத்த எண்ணிக்கை 78,14,682

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,370 பேருக்கு புதிதாக கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது. 

Last Updated : Oct 24, 2020, 11:37 AM IST
  • இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, 6,80,680 என்ற அளவில் உள்ளது.
  • குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,16,046 ஆகும்.
  • கடந்த 24 மணி நேரத்தில் 67,549 பேர் குணமாகியுள்ளனர்.
India COVID-19 Update: 53,370 புதிய பாதிப்புகள்; மொத்த எண்ணிக்கை 78,14,682  title=

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,370 பேருக்கு புதிதாக கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 650 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,17,956 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, 6,80,680  என்ற அளவில் உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  70,16,046 ஆகும், கடந்த 24 மணி நேரத்தில் 67,549 பேர் குணமாகியுள்ளனர்.

ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,44,426 ஆக உள்ள நிலையில், நாட்டில் COVID-19 தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து உள்ளது. மாநிலத்தில் 14,45,103 நோயாளிகள் இந்த நோயிலிருந்து குணம்டைந்துள்ளனர், இதுவரை 43,015 நோயாளிகள் இறந்துள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாநிலங்களில், ஒன்றான கர்நாடகாவில் 89,502 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர், அதே நேரத்தில் 6,93,584 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 10,821 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

மேலும் படிக்க | பயங்கரவாதத்தின் தந்தை பாகிஸ்தான்... காஷ்மீர் விஷயத்தில் தெளிவான பதிலளித்த இந்தியா..!!!

கேரளாவில் 95,760  ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர், அதே நேரத்தில் மாநிலத்தில் இதுவரை 2,80,793 நோயாளிகள் குணமாகியுள்ளனர், மேலும் இந்த நோயால் 1,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 36,471 ஆக்டிவ் நோயாளிகளும், தமிழகம் மற்றும் தேசிய தலைநகர் டெல்லியில் முறையே 32,960 மற்றும் 26,001 ஆக்டிவ் நோயாளிகளும் உள்ளனர்.

இதற்கிடையில், அக்டோபர் 23 வரை மொத்தம் 10,13,82,564 பேருக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் நேற்று 12,69,479 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், அதிக எண்ணிக்கையில்,  தினசரி குணமடைகின்றனர் என்றும், இந்த இடங்களில் 81 சதவீதம் என குணமடையும் விகிதம்  உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | Twitter-க்கு மத்திய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன... !!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News