யூரிக் ஆசிட் கட்டுப்படுத்தும் அருமையான கீரை! ப்யூரினை அடித்து தூளாக்கும் கடுகுக் கீரை

Musturd Keerai for Health: யூரிக் ஆசிடை நிரந்தரமாக கட்டுப்படுத்த இந்தக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் போதும்! சூப்பா வைத்து குடித்தாலும் பலன் தரும் கடுகுக் கீரை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 20, 2023, 01:00 PM IST
  • உணவின் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது எப்படி
  • யூரிக் ஆசிடை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் கீரை
  • சூப்பா வைத்து குடித்தாலும் பலன் தரும் கடுகுக் கீரை
யூரிக் ஆசிட் கட்டுப்படுத்தும் அருமையான கீரை! ப்யூரினை அடித்து தூளாக்கும் கடுகுக் கீரை title=

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானவை, இவற்றில் பல முக்கிய சத்துக்கள் உள்ளன. அதிலும் இந்தியாவில் பல வகையான கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. கீரைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேற்று ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை அதிகளவில் உள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல தீர்வாகும். 

வளர்ச்சிதை மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றும் நார்ச்சத்து கொண்ட கடுகுக்கீரை கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலையும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலையும் கொண்டது

நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் என பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் கடுகுக்கீரையில் அபரிதமாக உள்ளன.  

கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகுக்கீரையில் உள்ளது. எலும்புகளின் உறுதிக்கு தேவையான கால்சியம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கும் தாமிரம் சத்தும் கடுகில் உள்ளன.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் ரொம்ப அதிகமாக இருக்கா? இதோ இந்த வீட்டு வாவத்தியம் போதும்

இத்தனை நன்மைகளைக் கொண்டிருக்கும் கடுகுக்கீரையில் இருந்து கிடைக்கும் கடுகை நாம் தினசரி சமையலில் பயன்படுத்துவதற்கு அதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் தன்மை தான் காரணம். கடுகுக்கீரையை, கீரையாக பயன்படுத்தினால், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலுக்கு இன்னும் அதிகம் கிடைக்கும். கடுகு இலை சூப்பாக செய்து குடித்தால் யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நிரந்த தீர்வு கிடைக்கும்.

கடுகுக் கீரையில் உள்ள ஃபைட்டோநியூட்ரியண்ட்ஸ், ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூலக்கூறுகள் ரெண்டுமே உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தக் கூடியவை. கடுகுக்கீரையில் உள்ள போன் பில்டிங் வைட்டமின் (Bone Building Vitamins) என்று சொல்லப்படக் கூடிய விட்டமின் டி சத்து எலும்புகள் வலுவாக உதவுகிறது.

அதுமட்டுமல்ல, கடுக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சேர்மம்,  யூரிக் ஆசிட் போன்ற எலும்பு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது. உடலில் உருவாகும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் உடனடியாக வெளியேற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், கடுகுக்கீரை வேறு எந்த கீரையும் விட அதிக பலனைத் தருகிறது.

மேலும் படிக்க | Uric Acid: இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டதா? பிரச்சனையை தீர்க்க வழிகள் இவை

பொதுவாக கடுகுக் கீரை கடைகளில் விற்பதில்லை. ஆனால், வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம். கடுகை தொட்டியில் உள்ள மண்ணில் தூவி வைத்து பராமரித்தால் போதும், எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாத அருமையான கீரை வீட்டிலேயே கிடைத்துவிடும்.

கடுகுக் கீரை சாலட், கடுகுக் கீரை சூப், கடுகுக்கீரை பொரியல், கடுகுக்கீரை கூட்டு என இந்தக் கீரையில் பல்வேறு பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம். ஆனால், வாரத்திற்கு இரு முறை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும்.

கடுகுக்கீரையில் உள்ள ஐசோதியோசயனேட், புற்றுநோய் உருவாக்கும் பொருட்களில் உள்ள நஞ்சை நீக்குகிறது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல் இரைப்பை தடத்தையும், குடல்வாலையும் பாதுகாப்பதால், புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. கடுகுக்கீரை, ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான கீரையாக கருதப்படுகிறது. எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை இந்த கடுகுக்கீரைக்கு உள்ளது. 

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கீல்வாதம், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சுலபமான வழி! ஃபாலோ பண்ணா ஆரோக்கியம் உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News