யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது: யூரிக் அமில பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பொதுவாக, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன, இது சிறுநீரகத்திலிருந்து கல்லீரல் வரை பாதிக்கத் தொடங்கும். இதைத் தவிர்க்க, நம் அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இல்லையெனில் வலி அதிகரிக்கலாம். வழக்கமான உடற்பயிற்சியுடன், உணவு முறையை கடைபிடிப்பது நிவாரணத்தை கொடுக்கும். இருப்பினும், சில எளிய வீட்டு வைத்தியங்களையும் கடைபிடிப்பது, இந்த தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
1. ஓமம் நீர்
ஓமம் என்பது ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா, ஆனால் யூரிக் அமிலத்தையும் அதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இது மற்ற வயிற்று பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது.
2 . எலுமிச்சை
தினமும் 2 லிட்டர் தண்ணீருடன் இரண்டு எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வது கீல்வாத நோயாளிகளின் யூரிக் அமில அளவை வெகுவாக குறைக்கிறது என்பது கண்டறிப்பட்டுள்ளது. எலுமிச்சை நீர் இயற்கையாகவே யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது.
3. மஞ்சள்
மஞ்சளில் முக்கிய உயிரியக்க கலவையான 'குர்குமின்' பல்வேறு சிகிச்சைக்கு ஆதாரமாக உள்ளது என்று ஆராய்ச்சி பல உறூதிபடுத்தியுள்ளது. மஞ்சள் நீர் யூரிக் அமில அளவையும் குறைக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
4. தண்ணீர்
தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நல்ல ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போதெல்லாம், தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிப்பது நல்ல பலனைத் தரும். இது நமது சிறுநீரகங்கள் உடலின் நச்சுகளை வடிகட்ட உதவும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5. ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இது தவிர, யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலம் இயற்கையாகவே குறையும்.
4. போதுமான தூக்கம்
சிறந்த ஓய்வு கிடைக்க, ஒரு இளைஞன் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், ஆனால் குறைவான தூக்கத்தால் யூரிக் அமிலமும் அதிகரிக்கிறது. அதனால்தான் நீங்கள் போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ