அன்றாடம் நாம் சாப்பிடக்கூடிய நன்றாக செரிமானகிவிட்டாலே உடலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது, செரிமான கோளாறு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் தான். நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் அடையவில்லை எனில் நாம் வீட்டிலிருக்கும் சில பொருட்களை சாப்பிடுவோம் ஆனால் அப்படி நிவாரணத்திற்காக நாம் சாப்பிடும் பொருட்கள் உண்மையாகவே நமது செரிமான மண்டலத்தை சமன்செய்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. செரிமானத்தை சரிசெய்யும் என்று நாம் நம்பி சாப்பிடும் பொருட்கள் பெரும்பாலும் நமக்கு அஜீரணத்தை தான் ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
செரிமானத்திற்கு நாம் பருகும் குளிர்ந்த தண்ணீர் மற்றும் சூடான எலுமிச்சை/இஞ்சி தேநீர் போன்றவை நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்ந்த நீர் குடிப்பது கண்டிப்பாக அஜீரண கோளாறை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், குளிர்ந்த நீர் அல்லது குளிர் பானங்கள் போன்றவற்றை நாம் குடிக்கும்போது நமது இரத்த நாளங்களைச் சுருக்கி செரிமானத் திறனை பாதிக்கிறது. மேலும் குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமானத்தின் போது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் இயற்கையான செயல்முறையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
அடுத்ததாக எலுமிச்சை மற்றும் இஞ்சி இந்த இரண்டிலும் இயற்கையாகவே கெமிக்கல் உள்ளது, சிலசமயம் இது அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிகளைப் போக்க உதவுகிறது. அடுத்ததாக செக்கு எண்ணெயில் அதிகமான கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி போன்ற பல நல்ல கொழுப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி சமைப்பது செரிமான பிரச்சனையிலிருந்து தடுக்க உதவுகிறது. பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி நூடுல்ஸைத் சாப்பிடுங்கள். அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பழச்சாறுகளுக்கு பதிலாக ஸ்மூத்திகளை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், ஸ்மூத்திகளில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன மற்றும் இது செரிமானத்திற்கும் உதவும்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ