Weight Loss Tips: உடல் பருமன் இந்த நாட்களில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். எனினும், இவற்றாலும் அனைவருக்கும் தேவையான விளைவுகள் அனைத்து, கிடைத்துவிடுவதில்லை.
சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. பலர் உடல் எடையை குறைக்க (Weight loss) பல வித பானங்களை குடிக்கிறார்கள். ஓம நீர், சீரக நீர் ஆகியவை எடை இழப்புக்கு உதவும் சிறப்பு பானங்களாக கருதப்படுகின்றன. ஆனால், இவற்றாலும் ஒரே இரவில் எடையை குறைத்து விட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சீரக நீர், ஓம நீர் ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன, இவை உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகின்றான. இந்த செயல்முறைகள் நன்றாக நடந்தாலே கூடுதல் எடையை கட்டுப்படுத்தலாம்.
Cumin Seeds Water: சீரக நீரின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கே காணலாம்:
எடை இழப்புக்கு உதவும் (Weight Loss):
சீரக நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதால், உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்வதால் எடையை குறைப்பதில் நல்ல பலன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
செரிமானத்தை மேம்படுத்த உதவும் (Digestion):
சீரக நீர் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அஜீரணத்தை குறைத்து, இது உடல் இயக்கத்தை சீராக்குகிறது. இதைதொடர்ந்து உட்கொள்வதால், உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்கின்றது. இது உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. வயிறு உப்பசம், வாயுத்தொல்லை ஆகியவை நீங்க சீரக நீர் உட்கொள்ளலாம்.
ஹார்மோன் சமநிலை (Hormone Balance):
ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்த சீரகம் பெரிய அளவில் உதவுகின்றது. சீரக நீரை தொடர்ந்து உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையை சமன் செய்ய உதவும். இதனால் உடலின் பிற செயல்பாடுகளும் சீராகும்.
உடல் எடையை குறைக்க சீரக தண்ணீரை எப்படி குடிப்பது?
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து, தண்ணீரை ஆற விடவும்.
- சீரகத்தின் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கி விடும்.
- தண்ணீர் ஆறிய பின் வடிகட்டி குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ