புற்றுநோய் என்ற பெயரே மனதில் அச்சத்தை ஏற்படுத்தும். மிக ஆபத்தான இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், அதை குணப்படுத்த முடியும். புற்றுநோயின் ஆரம்ப நிலை 'ஸ்டேஜ் ஜீரோ' அல்லது புற்றுநோய்க்கு முந்தைய நிலை என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோய் முழுமையாக உருவாகாத இந்த நிலையில், சில ஆரம்ப அறிகுறிகள் உடலில் தோன்றும். இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு பயனுள்ள சிகிச்சையும் சாத்தியமாகும்.
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷைலேஷ் புண்டம்பேகர், போதிய விழிப்புணர்வு இல்லாததால் பூஜ்ஜிய நிலை புற்றுநோயின் அறிகுறிகளை பெரும்பாலோனோர் புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஸ்டேஜ் ஜீரோ கேன்சரை சுட்டிக்காட்டக்கூடிய டாக்டர் ஷைலேஷ் குறிப்பிட்ட 7 அறிகுறிகளை (Health Tips) தெரிந்து கொள்வோம்.
வாயில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகள்
நாக்கு அல்லது வாயில் வெள்ளை அல்லது சிவப்பு திட்டுகளும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இந்த திட்டுகள் காலப்போக்கில் அளவில் அதிகரித்தால், அது தீவிரமான பிரச்சனையாக மாற வாய்ப்பு உண்டு.
அடிக்கடி ஏற்படும் வாய் புண்கள்
உங்களுக்கு அடிக்கடி வாய் புண்கள் இருந்தாலும், அவை ணமடைய நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும், அது புற்றுநோய்க்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அதனை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
உடல் பலவீனம் மற்றும் சோர்வு
ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பழக்கம் உள்ள போதிலும், காரணம் இல்லாமல், உங்கள் எடை வேகமாக குறைந்து கொண்டே இருந்தால், அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே அதனை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு
காரணம் எதுவும் இல்லாமல், உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தால், வயிறு அல்லது குடலில் கடுமையான பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அதனை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்
உடலில் தோன்றும் திடீர் கட்டிகள்
உடலின் எந்தப் பகுதியிலும் திடீரென கட்டிகள் ஏற்பட்டால் அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த கட்டியை புறக்கணிக்காதீர்கள், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
நீண்ட காலம் நீடிக்கும் மலச்சிக்கல் பிரச்சனை
மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்து நீடித்து இருந்தால், அது வயிறு அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.எனவே, செரிமான பிரச்சனை தான் அதனை புறக்கணிக்காக்காதீர்கள்
திடீரென்று வளர ஆரம்பிக்கும் கருப்பு மச்சம்
உங்கள் உடலில் உள்ள ஒரு மச்சம் திடீரென வளர ஆரம்பித்தாலோ அல்லது அதன் வடிவம் அல்லது நிறம் மாற ஆரம்பித்தாலோ, அது தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ