கொரோனாவில் பாதுகாக்க ஏன் மஞ்சளுடன் மிளகு சேர்க்க வேண்டும்? ஆச்சரியமான உண்மை

Immunity Booster vs Corona: கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டார்கள் மட்டுமல்ல, பாதிக்கப்படாதவர்களும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு கொடுப்பது நாம் தேர்ந்தெடுக்கும் உணவுகளே...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 5, 2023, 07:55 PM IST
  • உணவு விஷயத்தில் கவனம் செலுத்த எச்சரிக்கும் கொரோனா
  • நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகள்
  • கொரோனா பாதிப்பை தவிர்க்க உதவும் பழங்கள்
கொரோனாவில் பாதுகாக்க ஏன் மஞ்சளுடன் மிளகு சேர்க்க வேண்டும்? ஆச்சரியமான உண்மை title=

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், நாம் அனைவரும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். நமது உணவே, நோயால் பாதிக்கப்பட்டாலும், உடலை மீட்டெடுக்கும் சக்தியை பெற்றிருக்கிறது. கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டார்கள் மட்டுமல்ல, பாதிக்கப்படாதவர்களும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டு வந்திருந்தவர்களும் குறிப்பாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். என்ன சாப்பிடுகிறோமோ, அதை சார்ந்தே நமது நோய் எதிர்ப்பு திறன் உருவாக. நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம் இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.   

கோவிட் பாதுகாப்பு

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளவும், எதிர்த்து போராடவும் நோய் எதிர்ப்பு திறன் அவசியம். இது தெரிந்த விஷயம்தான். நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு Anti - Oxidants அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ORAC (Oxygen Radical Absorbance Capacity)மிக அதிகமாக உள்ள சீரகம், உலர் பழங்கள், முருங்கக்கீரை, மஞ்சள், பட்டை, மிளகு, போன்ற உணவுகளில் ORAC Value அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை நமது தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கான காரணம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை உதவும் என்பதால் தான்.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இவற்றை எடுத்துக் கொண்டால், அது ஆபத்தையே கொடுக்கும். ஒரு நாளைக்கு ஐந்து சிட்டிகைக்கும் அதிகமக மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் வீக்கம் வரலாம்.

மஞ்சள் + மிளகு கலவை

மஞ்சளுடன் மிளகையும் சேர்த்து எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. மஞ்சளில் இருக்கும் குர்குமின், மிளகில் உள்ள பெப்ரின் சேரும்போது நன்றாக வேலை செய்யும். உதாரணமாக சமையலில் மஞ்சள் சேர்க்கும் உணவுகளில் மிளகை சேர்க்க வேண்டும். அதேபோல, பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும்போது, அதனுடன் மிளகுத்தூளையும் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான முட்டை பேராபத்து!

இலவங்க பட்டையின் சக்தி

இலவங்கப் பட்டையை தினசரி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவடையும். ஆனால், மூன்று மாதங்களுக்கு மேல் பட்டையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளவேண்டாம். அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் போதும்.

வைட்டமின் சி

முருங்கக்கீரையில் வைட்டமின்-சி, இரும்புச் சத்து, நார்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மிக அதிகமான ORAC Value கொண்டுள்ள உணவு முருங்கை

நீர்ச்சத்து கொண்ட பழங்கள்

நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு நல்லது. ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்து ஏபிசி ஜூஸ் குடிக்கலாம், இந்த ஜூஸை வாரத்தில் மூன்று நாட்கள் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

சக்தி கொடுக்கும் சூப் வகைகள்

முருங்கக்கீரை சூப், தக்காளி சூப், காய்கறி சூப், ரசம், வெதுவெதுப்பான பால் ஆகியவற்றை குடிக்கலாம். சூப்களும் ஜூஸ்களும் உடலில் உள்ள ஆக்சிஜன் சேச்சுரேஷன் அளவை சீராக்கும். தேவையான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News