Aluminium Foil: ஆண்மை குறைபாடு முதல், சிறுநீர்க நோய் வரை; வெளியான பகீர் தகவல்..!!

அலுமினிய தாளில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால், ஆண்மை பாதிப்பு முதல்  கிட்னி பாதிப்பு வரை உடலில் பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2021, 01:51 PM IST
  • அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவைச் சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
  • சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்.
  • நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது.
Aluminium Foil: ஆண்மை குறைபாடு முதல், சிறுநீர்க நோய் வரை; வெளியான பகீர் தகவல்..!! title=

Aluminium Foil: பெரும்பாலான மக்கள்  உணவை பேக் செய்ய அலுமினியம் பாயில், அதாவது அலுமிய தாளை பயன்படுத்துகின்றனர். உணவு அதில் ப்ரெஷ்ஷாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதில் உள்ள ரசாயனங்கள் உங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் நடத்திய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்டீரியா வளரும் ஆபத்து

அலுமினியத் தாளில் பேக் செய்த உணவுகள், அதில் நீண்ட நேரம் வைக்கப்பட்டிருக்கும் போது, பாதிப்பை உண்டாக்குகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், அதில் உள்ள எண்ணெய்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் அலுமினியத்துடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும், ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒரு நிலையான ஆயுள் உண்டு. இதற்குப் பிறகு, உணவுப் பொருட்கள் சுற்றியுள்ள சூழலில் இருந்து பாக்டீரியாவை கிரகித்து கொள்ள தொடங்குகின்றன. மேலும் ஒரு சூடான உணவை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, ​​இரண்டு மணி நேரத்திற்குள் நிறைய பாக்டீரியாக்கள் அதில் உருவாகும். அலுமினியத் தாள் அத்தகைய பாக்டீரியா வளரும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

ஆண்களின் ஆண்மை தன்மை பாதிக்கப்படும் அபாயம்

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை  குறைகிறது. இதன் காரணமாக, அவருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.

ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பீட்ஸாவின் ஒரு துண்டு ஆயுளின் 8 நிமிடங்களை விழுங்கி விடும்

 

அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா (Dementia) 

அலுமினியம் தாளில் பேக் செய்யப்பட்ட சூடான உணவை சாப்பிடுவதன் மூலம், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நியாபக சக்தி குறைவதினால் ஏற்படும் தீவிர நோய்கள் ஏற்படும் அபாயத்தை நீங்கள் அதிகரிக்கிறீர்கள் என நிபுணர்கள் கூறுகிறனர்.

சிறுநீரக நோய்

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை தினமும் சாப்பிட்டால், அது உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும். இதனுடன், சிறுநீரக நோய் அபாயமும் அதிகரிக்கிறது.

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

சுவாசக் கோளாறு
அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை தினமும் சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு மூச்சுப் பிரச்சனை அல்லது ஆஸ்துமாவும் ஏற்படலாம்.

நோயெதிர்ப்பு அமைப்பு சேதமடைகிறது

அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறன் குறைக்கிறது.

கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவும்

பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்க உணவை எப்போதும் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கவும்.

சமைத்த பிறகு, இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சேமித்து வைக்கவும்.

பால் மற்றும் இறைச்சி பொருட்களில் பாக்டீரியா வேகமாக வளர்கிறது.

மூன்று மணி நேரத்திற்கு மேல் வெளியில் வைக்கப்படும் உணவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

Trending News