இளநரை பிரச்சனைக்கு சுரைக்காய்: தற்போதைய காலகட்டத்தில், இளம் வயதிலேயே முடி நரைப்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இப்போதெல்லாம் இளம் வயதினர் இந்த பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு நிவாரணம் காண பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
பலர் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதனால் முடி சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே கருமையான கூந்தலை மீண்டும் பெற இயற்கையான முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.
சுரைக்காய் சாப்பிட்டால் வெள்ளை முடி கருப்பாக மாறும்
வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க சுரைக்காயை பயன்படுத்தலாம். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் காய் இது. இதை சாப்பிடுவது இயற்கையான முறையில் கருமையான கூந்தலை கொடுப்பது மட்டுமல்லாமல், முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும். எனவே இந்த சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடுவது இந்த பிரச்சனைக்கு விடிவு தரும்.
மேலும் படிக்க | Milk Benefits: பாலை ஹாட், கோல்ட், எப்படி குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்?
வீட்டில் சுரைக்காய் எண்ணெயை தயார் செய்யவும்
வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க, சுரைக்காயின் உதவியுடன் ஒரு சிறப்பு எண்ணெயைத் தயாரிக்கலாம். இருப்பினும் அதைத் தயாரிக்க தேங்காய் எண்ணெயும் தேவைப்படும். இதை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே காணலாம்.
- முதலில், சுரைக்காயை தோலுடன் வெட்டி, நல்ல சூரிய ஒளியில் சுமார் 5 நாட்களுக்கு உலர வைக்கவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
- பின் காய்ந்த சுரைக்காய் துண்டுகளை இந்த எண்ணெயில் போட்டு கொதிக்கவிடவும்.
- சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கொதித்து, சுரைக்காய் நன்றாக வெந்த பிறகு, கேஸ் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
- இப்போது அதை முழுவதுமாக ஆறவைத்து, பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் எண்ணெயை சேமித்து வைக்கவும்.
- இரவில் தூங்கும் முன் இந்த எண்ணெயை தலையில் தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமான நீரில் முடியைக் கழுவவும்.
- இதை தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் உங்கள் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Summer Tips: கோடையில் இந்த காயை சாப்பிட்டால் போதும், கோடை கூலாக கழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR