தைராய்டு என்னும் நாளமில்லா சுரப்பி நமது உடலில் வெப்பநிலை, இதயத் துடிப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. சில நேரங்களில் உடலில் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தால் அதை ஹைப்போ தைராய்டிசம் என்றும், அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது. தைராய்டு பிரச்சனைகள் உடலின் பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கிறது. தைராய்டு சிகிச்சையின் போது, மருந்துகளுடன் டயட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தைராய்டு பிரச்சனை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதைக் குணப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சனைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால், அதனை கட்டுப்படுத்த உணவு முறையில் (Health Tips) மாற்றம் தேவை.
ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டியவை
சோடியம் அதிகம் உள்ள உணவுகள்
தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் அயோடின் முக்கியப் பங்கு வகிக்கிறது. உப்பு, கடல் உணவு, கடற்பாசி போன்ற அயோடின் அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகப்படியான சோடியம் உள்ளது. எனவே இந்த உணவுகளை தவிர்க்கவும்.
காஃபின் மற்றும் ஆல்கஹால்
காஃபின் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. காஃபின் கலந்த பானங்களான டீ, காபி, எனர்ஜி பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது ஹைப்பர் தைராய்டு அறிகுறிகளை இன்னும் தீவிரப்படுத்தும். பதட்டம், அதிகரித்த இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மது அருந்துவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது உடலின் மெட்டபாலிசத்தையும் பாதிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வது தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும் என்பதால் இது ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளை இன்னும் கடுமையாக்குகிறது.
மேலும் படிக்க | பப்பாளி பழத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்... வலுவான 10 காரணங்கள் இதோ...
ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஹைப்போ தைராய்டிசத்தில், தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாது நிலை உண்டாகிறது. இதன் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. கோய்ட்ரோஜன்கள் கொண்ட உணவுகள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்கலாம். இது ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, முள்ளங்கி மற்றும் நூற்கோல் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள்
அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து உட்கொள்வது தைராய்டு மருந்துகளை உடல் உறிஞ்சும் திறன் குறையலாம். முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் சில பழங்கள் போன்றவை நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.
சோயா பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சோயாவில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன, இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும். சோயா பொருட்களை அதிகமாக உட்கொள்வது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு ஒருபோதும் நல்லதல்ல. இது சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் தைராய்டுக்கு பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை உள்ளது. இது உடல் பருமனை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி
தைராய்டு பிரச்சனை இருந்தால், தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் கட்டுக்கோப்பாக இருப்பதுடன், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ