புதுடெல்லி: கோவிட் நோய் பாதித்தவர்களுக்கு அதன் தாக்கம் நீண்டகாலம் இருக்கிறது என்று உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று கோவிட் நோயாக மாறி குணமாகிவிட்டாலும், அதன் பக்கவிளைவுகள் நீண்ட காலம் தொடர்கிறது. இந்த பாதிப்பு, வயது, பாலினம் என எந்த பேதமும் பார்ப்பதில்லை.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
COVID-19 இன் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கணித்ததை உறுதி செய்யும் உலக சுகாதார அமைப்பு (WHO), இது COVID தொற்று மட்டுமல்ல, பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பின் விளைவுகளும் கவலையளிப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
Also Read | CMCHISTN:தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் எப்படி சேர்வது?
WHO அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் தோன்றியது வெளிவந்த பிறகு, கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இந்த கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"கோவிடுக்கு பிந்தைய பாதிப்பு அல்லது நீண்டகாலம் தொடரும் கோவிட் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்துவதாக WHO தெரிவிக்கிறது" என்று UN சுகாதார நிறுவனத்தின் கோவிட் -19 தொழில்நுட்ப முன்னணி அதிகாரி மரியா வான் கெர்கோவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"கோவிட் பக்க விளைவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது, பிந்தைய கோவிட் நோய்க்குறி என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் நாங்கள் பணியாற்றுகிறோம்" என்று கூறுகிறார்.
Also Read | பருக்களை மாயமாக்கி, சருமத்தை ஒளிரச் செய்யும் எண்ணெய்! இதுதான்...
நீண்ட கோவிட் ஏற்படுத்தும் பாதிப்புகள் கவலையளிக்கின்றன. நீண்ட COVID என்பது ஒரு கொரோனா வைரஸ் குணமடைந்த ஒருவர், அதன் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் நிலையை Long COVID அதாவது நீண்டகால கோவிட் என்று சொல்கின்றனர். கோவிட் பாதித்த அனைவருக்கும் இது தோன்றுவதில்லை, சிலருக்கு மட்டும் ஏன் நீண்ட கோவிட் தோன்றுகிறது,
பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்றின் இந்த நீண்டகால விளைவுகளிலிருந்து எப்போது முழுமையாக குணமடைவார்கள் என்பது குறித்து மருத்துவ சமூகத்திற்கு இதுவரை எந்த தெளிவும் ஏற்படவில்லை.
நீண்ட கோவிட் ஏற்பட்டவர்களுக்கு, அதீதமான சோர்வு, ஆற்றல் இழப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும், ஏனெனில் கொரோனாஅ வைரஸ் நுரையீரலை சேதப்படுத்திவிடுகிறது. தொடர்ச்சியான இருமல், மூட்டுகளில் கடுமையான வலி, தசை வலி, செவிப்புலன் மற்றும் கண்பார்வை பிரச்சினைகள், தலைவலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உயிருக்கு ஆபத்தான கட்டிகள், பக்கவாதம் மற்றும் சிறுநீரகங்கள் குடலில் சேதம், தலைமுடி கொட்டுதல் என பல விளைவுகள் கொரோனாவின் பக்கவிளைவாக தோன்றலாம்.
Also Read | Post Covid: அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா?
கொரோனா பாதித்த ஒருவர், நீண்ட கோவிட் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுகிறது. முதலில் இந்த நோயின் அறிகுறிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.: "நீண்ட காலம் கோவிடின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி உதவி பெற வேண்டும்" என்று வான் கெர்கோவ் கூறினார்.
நாவல் கொரோனா வைரஸ் பாதிப்பு வெவ்வேறு நபர்களில் வித்தியாசமாக வெளிப்படுகிறது. சிலர் 15 நாட்களுக்குள் குணமடைகின்றனர். ஆனால் அவர்களும் குணமடைந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகும் கொரோனாவின் பக்க விளைவுகளை எதிர்கொள்ளலாம்.
நரம்பியல் பிரச்சினைகள், நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியம் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் கருதுகின்றானர். கோவிடுக்கு பிந்தைய வைரஸ் அறிகுறிகளுக்கான காரணம் என்ன காரணம் என்பது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, பாதிக்கப்படுபவர்களின் சில உறுப்புகளில் வைரஸ் தாக்கம் நீடிப்பதே காரணம் என்றும் நம்பப்படுகிறது, ஆனால் இது உறுதிபடுத்தப்படவில்லை.
Also Read | Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR