HEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா?

மனிதர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் பலவாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு, காலையில் குளியலறையில் இருக்கும்போது தான் மாரடைப்பு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளியலறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களை அறிந்து கொண்டால், மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 07:54 PM IST
  • காலையில் கழிவறையில், வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது
  • குளிக்கும்போது முதலில் காலில் நீரை ஊற்றிய பிறகு தலைக்கு நீர் ஊற்றவும்
  • இந்திய பாணியிலான கழிவறையை பயன்படுத்தும்போது வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்
HEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா? title=

புதுடெல்லி: மாரடைப்பு இன்றைய சகாப்தத்தில் மக்களுக்கு மிகவும் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. மாரடைப்பு திடீரென ஏற்படுகிறது, அதன் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மாரடைப்பு நேரம் காலம் பார்த்து வருவதில்லை. இருப்பினும், பெரும்பாலான மாரடைப்பு காலை வேளையில் ஏற்படுகிறதாம், அதுவும் கழிவறையில் இருக்கும்போது வருகிறதாம்.

மாரடைப்பு மற்றும் இருதயம் செயலிழந்து (Cardiac Arrest) போவது ஆகியவை நேரடியாக ரத்தத்துடன் தொடர்புடையவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் (Oxygen) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தின் மூலம் தான் நமது உடலுக்கு செல்கின்றது. இதயத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் தமனிகளில் (arteries) அடைப்பு ஏற்படும்போது, இதயத் துடிப்பு விகிதத்தில் மாறுதல் ஏற்படுகிறது. அப்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது அல்லது இதயம் செயலிழக்கிறது.   

குளியலறையில் மாரடைப்பு  

காலையில் கழிப்பறைக்குச் செல்லும்போது, வயிற்றில் இருக்கும் கழிவுகளை முழுவதுமாக சுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்கிறோம். இந்திய பாணியில் இருக்கும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது,  அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது.   இந்த அழுத்தம் நமது இதயத்தின் தமனிகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மாரடைப்பு அல்லது இதயம் செயலிழக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Also Read | பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு 

வெப்பநிலை மாறுதல்
நமது வீட்டிலுள்ள மற்ற அறைகளை விட குளியலறை வெப்பநிலை குறைவாகவும், குளிராகவும் இருக்கிறது. இங்கே தொடர்ந்து நீர் (Water) பயன்படுத்தப்படுவதால் குளுமையாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் உடல் கடினமாக உழைப்பதே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ரத்த அழுத்தத்தில் மாறுதல்  

பொதுவாகவே நமது உடலில் ரத்த அழுத்தம் (Blood Pressure) காலை நேரத்தில் சற்று அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிப்பதற்காக அதிக குளிர்ந்த அல்லது சூடான நீரை தலையில் நேரடியாக ஊற்றும்போது, அது ரத்த அழுத்தத்தில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, குளியலறையில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

Also Read | Egypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்பு

மாரடைப்பைத் தடுப்பதற்கான வழிகள்
1. இந்திய கழிப்பறையைப் பயன்படுத்தினால், அதிக நேரம் ஒரே நிலையில் அமர வேண்டாம்.  
2. குளிக்கும் போது முதலில் கொஞ்சம் நீரை காலில் ஊற்றிப் பார்த்து அதன் பிறகு தலையில் நீரை பயன்படுத்தவும். இது உங்கள் உடல் மற்றும் குளியலறை வெப்பநிலையை சமன் செய்யும்.
3. கழிப்பறையில் அமர்ந்து அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மலம் இலகுவாக கழிவதற்கு ஏற்றவாறு இளகும்.
4. குளிப்பதற்கு குளியல் தொட்டியைப் பயன்படுத்தினால், அது உங்கள் தமனிகளையும் பாதிக்கும். எனவே குளியல் தொட்டியில் நீண்ட நேரம் உட்கார வேண்டாம்.

மாரடைப்பு அறிகுறிகள்
மாரடைப்பு அறிகுறி ஒரு திடீர் நிகழ்வு. எனவே அதன் அறிகுறிகளை (மாரடைப்பு அறிகுறிகள்) நீங்கள் அறிந்திருப்பது முக்கியம், இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது மாரடைப்பாக இருக்கக்கூடும்…

1. கடுமையான மார்பு வலி
2. சுவாசிப்பதில் சிக்கல்
3. பலவீனமாக உணர்கிறது
4. நீரிழிவு நோயாளிக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
5. மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாகும்.
6. தலைச்சுற்றல் அல்லது வாந்தியும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

Also Read | Wheelchairஇல் 250 மீட்டர் உயர கட்டடத்தில் ஏறி சாதனை படைத்த Lai Chi-wai

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News