கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன், எனக்கு இலாக்கா மாற்றமா? கொதிப்பில் மூத்த மாண்புமிகு

Gossip, கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன் கொடுத்துட்டு, எனக்கு முக்கியத்துவம் இல்லாத இலாக்காவை ஒதுக்குகிறீங்களா? என கொதிப்பில் இருக்கிறாராம் மூத்த மாண்புமிகு. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2024, 09:28 AM IST
  • மாண்புமிகு மாற்றத்தில் அதிருப்தி
  • மூத்த மாண்புமிகு கொதிக்கிறார்
  • ஜூனியர்கள் சிலரும் அதிருப்தியாம்
கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன், எனக்கு இலாக்கா மாற்றமா? கொதிப்பில் மூத்த மாண்புமிகு title=

Gossip News Tamil : " என்னப்பா, யாரும் வருத்தப்படாத அளவுக்கு மாண்புமிகுக்களின் மாற்றம் இருக்கும்னு முதன்மையானவர் சொன்னார். பார்த்தா அப்படி தெரியலையே. அவரு சொல்ற மாதிரி எல்லாம் செம ஹேப்பியா?" என டீ மாஸ்டர் கேட்க, "அண்ணே! அவரு அப்படி தான் சொல்லுவாரு, புகைச்சல் இல்லாமலா இருக்கும். மூத்த மாண்புமிகு, ஜூனியர் மாண்புமிகு என ஒரு சிலர் ஏகபோக கடுப்பில் தான் இருக்காங்க" என்றான் டீ குடிக்க வந்த குசும்பன். "கொஞ்சம் விலாவரியா சொல்லுப்பா?" என மாஸ்டர் அடுத்த கேள்வியை கேட்க, கதையை சொல்ல ஆரம்பித்தான் குசும்பன்.

"அண்ணே! மாண்புமிகு மாற்றத்துல மூத்த மாண்புமிகுவோட துறை மாத்தப்பட்டதுல வருத்தமா இருக்கிறாராம். முக்கியமில்லாத இலாக்கவுக்கு மாத்துற அளவுக்கு என் மேல அவ்ளோ அதிருப்தியா உங்களுக்கு என ஆவேசமா கேட்கிறாராம். நேத்து கட்சிக்கு வந்தவங்களுக்கு எல்லாம் அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறீங்க, காலம் காலமா இருக்கிற என்ன தூக்கி கணம் பாக்குறீங்களா? என கொதிக்கிறாராம். வாரிசுக்கு புரோமோஷன் கொடுத்துட்டு, என்ன தூக்கியடிச்சீடிங்களே?. இது சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியல என்கிறாராம் அந்த மூத்த மாண்புமிகு. எனக்கு அந்த துறையெல்லாம் வேண்டாம், மாண்புமிகுன்னு பேருக்கு இருக்க எனக்கு விருப்பம் இல்ல, என்னைய மொத்தமாக நீங்கிடுங்கனு நெருக்கமானவங்க கிட்ட தூது அனுப்பிவிட்டுட்டாராம்.

மேலும் படிக்க | கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்

 

"கோபபடாதய்யா, எல்லாம் பேசிக்கலாம்னு தூது கேட்டவரு சொல்ல, சிவந்த முகத்தையே காண்பிச்சாராம் அந்த மூத்த மாண்புமிகு. நான் பேசுறேன் உனக்கு, இப்போ வாரிசு முதன்மையானவர்கிட்ட வாழ்த்து வாங்க போறாரு, நீயும் வா போலாம்னு தூது கேட்டவரு சொல்ல, நான் எல்லாம் வரமாட்டேன், நீயே போய்ட்டு வான்னு அனுப்பி வச்சிட்டாரு அந்த மூத்த மாண்புமிகு. வாரிசு முதன்மையானவர் கிட்ட வாழ்த்து வாங்கும்போது இருக்கிற போட்டோவுல, அந்த மூத்த மாண்புமிகு மட்டும் மிஸ்ஸிங் ஆயிருப்பாரு. அதை பார்த்தீங்கணாவே, அவரோட அதிருப்தி உங்களுக்கு புரிஞ்சுரும் ணா" என குசும்பன் சொல்ல, " மேலிடம் இதைப் பத்தி என்ன சொல்லுதாம்" என அடுத்த கேள்வியை போட்டாரு டீ மாஸ்டர்.

"அண்ணே, இவரு மேல கொஞ்ச நாளாவே வருத்தத்துல தான் இருக்கிறாராம் முதன்மையானவர். டெல்லி பிரதிநிதியா இருக்கிறவரு கிட்ட இவரு உக்கிரமா நடந்துகிறதால, பசையை ஒதுக்காம டெல்லி பதிலடி கொடுக்குதாம். கூடவே, உட்கட்சி விவகாரத்துல மூத்த மாண்புமிகு மீது ஏகப்பட்ட ரிப்போர்ட் போய் இருக்கு. பொதுவெளியிலயே இன்னொரு மாண்புமிகுவோட இவரு சண்டைபோட்டதை தலைமை கொஞ்சம்கூட ரசிக்கலையாம். இவருகூட சண்டைபோட்டவர மாண்புமிகு லிஸ்ட்ல இருந்து தூக்கியடிச்சிட்டாடு முதன்மையானவர்". 

மூத்த மாண்புமிகுவை டம்மி போஸ்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு. இது மூலமா, யாராக இருந்தாலும் நடவடிக்கை தான்னு கட்சியோட மூத்தவங்களுக்கு கடுமையான மெசேஜ் சொல்லியிருக்கு முதன்மையானவர் தரப்பு. நீண்ட நாட்களா பிரதிநிதித்துவம் எதிர்பார்த்து இருந்தவங்களுக்காக இந்த முறை மாண்புமிகு வாய்ப்பும் கொடுத்திருக்கிறார் முதன்மையானவர், அதுக்காக ரெண்டு பேத்த நீக்கம் செஞ்சிருக்கிறாரு" என அறைகுறை தகலை கொடுத்துவிட்டு கிளம்பினான் குசும்பன்.

மேலும் படிக்க | கிசுகிசு : மாஜிக்கு ஜாமீன் தள்ளிப்போனதால் அதிரடி முடிவெடுத்த முதன்மையானவர்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News