புதுடெல்லி: கோடையில் நீரிழப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த எலுமிச்சைப் பழத்தை பயன்படுத்துகிறோம். வைட்டமின் சி இன் நல்ல மூலமான எலுமிச்சை சாறு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும்.
வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண்களை ஆரோக்கியமாக வைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, நமது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும். ஆனால் எலுமிச்சையின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இரண்டு ரூபாய்க்கு கிடைத்து வந்த எலுமிச்சை தற்போது 10 முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், எலுமிச்சையை வாங்கி சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி தினசரி தேவையை பூர்த்தி செய்ய, வைட்டமின் சி பெறக்கூடிய வேறு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது (Vitamin C Rich substitutes of Lemon)பொருத்தமானதாக இருக்கும். வைட்டமின் சி இயற்கையான ஆதாரமான சில உணவுகள் இவை.
வைட்டமின் சி தினசரி தேவை என்ன?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், வைட்டமின் சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவத்திலும் தேவைப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வயது வந்தவருக்கு தினமும் 90 மில்லிகிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது. அதேபோல, பெண்களுக்கு 75 மில்லிகிராம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தினசரி வைட்டமின் சி 120 மில்லிகிராம் தேவைப்படுகிறது.
மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும்
நெல்லிக்காய் மற்றும் புளி
புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட பழங்கள் மற்றும் நெல்லிக்காய், அருநெல்லிக்காய், புளி மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
எனவே, அவற்றை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர புதினா மற்றும் பச்சை மிளகாயிலும் வைட்டமின் சி அளவு மிக அதிகமாக உள்ளது. இவற்றையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
சிட்ரஸ் பழச்சாறு
எலுமிச்சை தவிர, ஆரஞ்சு, திராட்சைப்பழங்கள், மால்ட், டேன்ஜரைன்கள் மற்றும் பருவகால காய்களும் கனிகளும் வைட்டமின் சி சத்து கொண்டவை. இந்த பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
எலுமிச்சைக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த உணவுகள், வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்யலாம். இவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க, கருப்பு உப்பு, சீரகப் பொடி மற்றும் புதினா போன்றவற்றைச் சேர்த்து உட்கொள்ளலாம்.
கோடை பழங்கள் எலுமிச்சைக்கு சிறந்த மாற்றாகும்
பருவகால பழங்களை உட்கொள்வதால் உடலின் தட்பவெப்பம் சீராக பராமரிக்கப்படுகிறது. கோடை காலத்தில், இதுபோன்ற பல பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்மைச் சுற்றி எளிதாகக் கிடைக்கின்றன.
அவற்றில் வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். கொய்யா, லிச்சி, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி மற்றும் கிவி பழங்கள் போன்றவற்றை எலுமிச்சைக்கு மாற்றாக உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இரத்தத்தை சுத்தீகரிக்க வேண்டுமா? வெப்பத்தைத் தணிக்க வேண்டுமா? இந்த ஜூஸ் குடிங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR