இன்றைய காலகட்டத்தில், உடல் பருமன், தொப்பை கொழுப்பு என்பது, பெரும்பாலானோரை வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்து விட்டது. உடல் பருமன் என்பது நோய் இல்லை என்றாலும், அதனால், பல வகையான உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே உடல் எடையை கட்டுப்படுத்துவது அவசியம். இதற்கு டயட், உடற்பயிற்சி என பல வித முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கலாம். அதற்ற்கு சில தவறுகள் காரணமாக இருக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கடுமையான டயட் முறையை பின்பற்றுதல்
உடல் எடை குறைய சமச்சீரான உணவு உண்ண்ணுதல் போதுமானது. மருத்துவரை ஆலோசிக்காமல் கடுமையான டயட் முறையை பின்பற்றுவது தவறு. ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம். இதனால் பல ஊட்டச்சத்துகளை உடல் இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. உடலுக்கு எல்லா வித ஊட்டச்சத்தும் தேவை. நமது உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவரை ஆலோசிக்காமல் நாமாக முடிவெடுத்து தீவிர டயட்டை பின்பற்றுவது பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்திற்கும் உணவுப் பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்பதால், உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை. உடல் எடையை குறைக்க நாம் என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் உடல் எடை குறையாது. சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
வெள்ளை உணவுகளை அதிகம் சேர்த்தல்
வெள்ளை உணவுகளான மைதா, சர்க்கரை, உப்பு போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது, உங்கள் எடை இழப்பு முயற்சிகளை பாழடித்து விடும். அதிலும், அதிக சர்க்கரை சேத்த உணவுகள் மற்றும் மைதா உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. இதில் இருப்பதெல்லாம் கலோரி மட்டுமே.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய எதிரி. அதில் இருப்பதெல்லாம் அதிக அளவு சர்க்கரை, கலோரிகள் மற்றும் செயற்கை ரசாயனங்கள். உணவுப் பொருள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், உடலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உடல் பருமன் குறைய டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டியவை
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் குறையும். உடல் எடை குறைய மெட்டபாலிஸம் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு நார்ச்சத்து மிக மிக அவசியம். எனவே டயட்டில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள் கொழுப்பையும், தொப்பையை கரைக்க வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். எனவே மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதும், சாப்பிட்டபின் பெருஞ்சீரகம் அருந்துவதும் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.