புதுடெல்லி: வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. வெந்தயத்தையும் வெந்தயக் கீரையையும் வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும், தற்போது அனைவரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கும், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்றவை வராது.
வெந்தயம் ஒரு அருமையான உணவுப் பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது, வெந்தயத்தின் அற்புதமான ஆரோக்கிய பயன்கள் பல என்றாலும், உடல் எடையை குறைக்கவும், அத்துடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் தினசரி பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் தொப்பை மற்றும் கூடுதல் உடல் எடை சட்டென்று குறையும்?
வெந்தயத்தில் தேநீர் தயாரித்து குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய டீயை தொடர்ந்து அருந்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
மேலும் படிக்க | வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும்
வெந்தயத்தை தேநீராக தயாரிக்க தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி வெந்தயம்
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி தேன்
ஒரு கைப்பிடி துளசி இலைகள்
தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)
வெந்தய தேநீர் தயாரிக்கும் முறை
ஒரு சிறிய ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது தண்ணீர், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து, பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டவும். இப்போது, இதில் தேனைக் கலந்து குடிக்கவும். இந்த தேநீரை சூடாக குடித்தால் அருமையாக இருக்கும்.
இந்த தேநீரை தினசரி அருந்தினால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் உடல் எடை குறையும் என்பது சிறப்பு. உடல் எடையை குறைக்க உதவும் இந்த வெந்தய டீ குடித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு பல நன்மைகளும் உண்டு.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? உண்மையும்.. பலன்களும்..!
வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
வெந்தயம் உடலின் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக அறியப்படுகிறது, இது இதயத்தை எந்த நோய்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. வெந்தய விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்சைம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று கருதப்படுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது உங்கள் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை குடிப்பதால், அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற பல செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அல்சர், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த டீ குடிப்பது நன்மை பயக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் உடலில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை கணிசமாகக் குறைக்கிறது.
ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
வெந்தய விதைகளில் நல்ல அளவு புரதம் உள்ளது, இதன் காரணமாக உங்கள் ஹார்மோன் ஆரோக்கியம் சரியாக இருக்கும். இது உங்கள் உடலில் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், வெந்தயம் தசை வலிமையை அதிகரிக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க இதை செய்யாதீர்கள்... 6 பக்கவிளைவுகளால் பாதிக்கப்படலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ