காலை எழுந்தவுடன் வாந்தி சங்கடமா? இவை காரணமாக இருக்கலாம்.... ஜாக்கிரதை!!

Morning Nausea: ஒருவர் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 2, 2024, 06:25 PM IST
  • காலையில் வாந்தி சங்கடம் ஏன் ஏற்படுகின்றது?
  • இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
  • அவற்றை பற்றி இங்கே காணலாம்.
காலை எழுந்தவுடன் வாந்தி சங்கடமா? இவை காரணமாக இருக்கலாம்.... ஜாக்கிரதை!! title=

Morning Nausea: பலருக்கு காலை எழுந்தவுடன், வாந்தி சங்கடம் ஏற்படுவதுண்டு. வயிற்றை பிரட்டிக்கொண்டு வாந்தி வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும். காலையில் வெறும் வயிற்றிலேயே இந்த சங்கடம் தெரியும். சிலர் வாந்தி எடுப்பார்கள், சிலருக்கு அந்த உணர்வு மட்டும் இருக்கும். 

இப்படி எப்போதாவது நடந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எப்போதும் இப்படி இருப்பது சரியல்ல. உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான ஒரு வகையான சமிக்ஞை இது. பொதுவாக, இது உடலில் செரிமானம் சரியாக இல்லத போதிலும், ஆரோக்கியமற்ற சில உணவுகளை சாப்பிட்டதாலும் ஏற்படுகின்றது. ஆனால், தினமும் இப்படி நடந்தால் கவனமாக இருக்க வேண்டும். இப்படி இருப்பது சில நோய்களுக்கான அறிகிறியாக இருக்கலாம். 

காலையில் வாந்தி சங்கடம் ஏன் ஏற்படுகின்றது? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

1. குறைந்த இரத்த சர்க்கரை அளவு (Low Blood Sugar Level)

ஒருவர் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. இது Hypoglycemi என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, நீங்கள் காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி செய்து பின்னர் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

2. ஒற்றைத் தலைவலி (Migraine)

நீங்கள் தலைவலி பிரச்சனையால் அவதிப்பட்டாலோ அல்லது ஒற்றைத் தலைவலி (மைக்ரென்) நோயாளியாக இருந்து, அதற்காக மருந்துகளை உட்கொண்டாலோ, காலையில் வாந்தி சங்க்டம் ஏற்பட வாய்ப்ப்கள் உள்ளன. 

மெலும் படிக்க | மாரடைப்புக்கு காரணமான LDL கொலஸ்ட்ராலை... எகிற வைக்கும் சில உணவுகள்

3. மன அழுத்தம் (Mental Tension)

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் அவதிப்படுபவர்களுகும் காலையில் குமட்டல் மற்றும் வாந்தி சங்கடம் ஏற்படலாம். இவர்களுக்கு காலையில் எழுந்தவுடன், மனச் சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் வாந்தி சங்கடமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

4. இரைப்பை அழற்சி (Gastritis)

உங்கள் வயிற்றில் வீக்கம் இருந்தாலோ, அல்லது வாயு உருவாகி வாயுத்தொல்லை ஏற்பட்டாலோ, காலையில் எழுந்ததும் வாந்தி வரக்கூடும். காலையில் வெறும் வயிற்றில் இருப்பதால் இந்த பிரச்சனைகள் அதிகரித்து வாந்தி வரலாம். இந்த பிரச்சனை ஏற்படுபவர்களுக்கு, காலையில் வாந்தியுடன் மயக்கமும் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. இவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இரவில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இவை தவிர உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை, தூக்கமின்மை அல்லது இரவில் ஆரோக்கியமற்ற, ஹெவி உணவுகளை உண்பதாலும் காலையில் எழுந்தவுடன் வாந்தி சங்கடம் ஏற்படக்கூடும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மெலும் படிக்க | குடலை பயன்படுத்தி பிறப்புறுப்புக்கு பாதை உருவாக்கி சாதனை... சிறுமியின் பிறவி நோயை போக்கிய மருத்துவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News