ஃபுட் பாய்சனா? ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவே அதை கெடுத்தால்? காரணமும் தீர்வும்

Food Poisoning Alert: உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்றால், நாம் சாப்பிடும் சாப்பாடே நமது உடலின் நோய்க்கும் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2023, 04:24 PM IST
  • ஆரோக்கியத்தை பாதுகாக்க ஹெல்த் அலர்ட்
  • உணவே மருந்து என்றாலும் நோய்க்கு காரணமும் உணவுதான்
  • உணவின் நச்சுத்தன்மை அலர்ட்
ஃபுட் பாய்சனா? ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவே அதை கெடுத்தால்? காரணமும் தீர்வும் title=

உடலை சரியான இயங்க வைக்க நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்றால், நாம் சாப்பிடும் சாப்பாடே நமது உடலின் நோய்க்கும் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நாம் உண்ணும் உணவு ஏற்படுத்தும் சாதக பாதகங்கள் நீண்ட நாள் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தில் வெளிப்படும். ஆனால், நாம் உணவு உண்டதில் இருந்து சில மணி நேரங்களுக்குள் உடலில் நோய் ஏற்பட்டால் அதற்கு நேரடி காரணமாக உணவு இருக்கும்.

நாம் உண்ட உவினால் குறிப்பிட்ட நேரத்திற்கும் ஏற்படும் உடல் நலக்குறைவுகள் பொதுவாக ஃபுட் ஃபாய்சனிங் (Food Poisoning) என்று குறிப்பிடப்படுகிறது, இது அசுத்தமான, கெட்டுப்போன அல்லது நச்சு உணவை உண்பதன் விளைவாகும். குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஃபுட் ஃபாய்சனிங்கின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.

பார்க்கப்போனால், Food Poisoning என்பது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அது தரும் சிக்கல் மிகவும்ச் இரமமானது. நாட்டில் வசிக்கும் மக்களில் ஆறில் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு வகையான உணவு நச்சுத்தன்மை பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | வாழைப்பழத்துடன் கூட்டணி சேராத சில உணவுகள்.. ‘இவற்றை’ தவிர்க்கவும்!

உணவு நச்சு அறிகுறிகள்
வயிற்றுப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, பசியிழப்பு, லேசான காய்ச்சல், பலவீனம், தலைவலி, உடலில் காரணம் தெரியாத அசெளகரியம் என ஆளுக்கு ஆள் அறிகுறிகள் மாறுபட்டாலும் இவை அனைத்தும் அதிக ஆபத்தில்லாதவை ஆகும். 

ஆனால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் மிகவும் மோசமானவை.

தீவிரமான உணவு நச்சு அறிகுறிகள் 

3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்கு, 102°F (38.9°C) க்கும் அதிகமான காய்ச்சல், பார்ப்பதில் அல்லது பேசுவதில் சிரமம், கடுமையான நீரிழப்பின் அறிகுறிகள், வாய் வறண்டுபோவது, சிறிது சிறிதாக சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது ஆகியவை ஆகும்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

உணவு நச்சுக்கான காரணங்கள்
பெரும்பாலான சமயங்களில் ஃபுட் பாய்சனிங் ஆவதற்கு காரணமக இருப்பது பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் அல்லது வைரஸ்கள் ஆகும். இந்த நோய்க்கிருமிகள் மனிதர்கள் உண்ணும் அனைத்து உணவுகளிலும் காணப்படுகின்றன. உணவை சமைக்கும்போது உணவுப் பொருட்களில் உள்ள நோய்க்கிருமிகள் மறைந்துவிடுகின்றன.

மேலும் படிக்க | பெண்களின் ஆரோக்கியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புப் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

ஆனால், சமைக்காமல் நாம் பச்சையாக உண்ணப்படும் உணவுகள் உணவு நச்சுத்தன்மையின் பொதுவான ஆதாரங்களாக இருக்கின்றன. உணவைத் தயாரிக்கும் போது, சமைப்பதற்கு முன் கைகளைக் கழுவாதபோது இது பெரும்பாலும் நிகழ்கிறது.

இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் அடிக்கடி மாசுபடுகின்றன. நோயை உண்டாக்கும் உயிரினங்களாலும் நீர் மாசுபடலாம்.

பாக்டீரியா
உணவு விஷத்திற்கு பாக்டீரியாக்கள் மிகவும் பொதுவான காரணம். உணவு விஷத்தின் பாக்டீரியாக்களில் Campylobacter மற்றும் C. Botulinum ஆகியவை நம் உணவில் பதுங்கியிருக்கும் குறைவான அறியப்பட்ட மற்றும் ஆபத்தான ஆபத்தான இரண்டு பாக்டீரியாக்கள் ஆகும்.

மேலும் படிக்க | பஞ்சாமிருத உலர்பழங்கள்! காலை மாலை இரவு எப்ப சாப்பிட்டாலும் டேஸ்ட் + ஹெல்த் கேரண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News