இளம் தம்பதிகளிடையே குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது அதிகரித்து வரும் சூழம் கவலையை ஏற்படுத்தி வருகிறது. உணவு முறை மற்றும் மருத்துவ ஆலோசனை இரண்டும் நேர்க்கோட்டில் பயணித்தால் நிச்சயம் தாய்மை அடையலாம். முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் ஆரோக்கிய பாதிப்புகளை உருவாக்கி, கருவுறாமைக்கு காரணமாக அமைகின்றன. இவற்றை போக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் காட்டுயானம் அரிசி சாப்பிடும் ஆண்களின் விந்து விருத்தி தரமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தம்பதிகள் சீக்கிரம் தாய்மை அடையலாம்.
இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூடியது என்பதால் இதன் பெயர் ‘காட்டு யானம் அரிசி’ என்று அழைகப்படுகிறது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிசியான இந்த காட்டுயானம் அரிசி அரிதாக கிடைக்கக் கூடியது. இதை ஆன்லைனில் கூட இப்போது ஷாப்பிங் செய்து வாங்கலாம்.
காட்டுயானம் அரிசி பயன்கள்:
புற்றுநோயைப் போக்கும்
காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உருவாகும் புற்று நோய் செல்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
மலச்சிக்கல் பிரச்சனை
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்குக் காட்டுயானம் அரிசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
மேலும் படிக்க | மாரடைப்பு மட்டுமல்ல.. ‘இவற்றின்’ காரணமாகவும் நெஞ்சு வலி வரலாம்!
நீரிழிவு நோய் குணமாகும்
இந்த அரிசியைச் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. நீரிழிவு நோயாளிகள் இந்த காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் குணமாவதுடன் சர்க்கரை அளவு சமநிலையிலும் இருக்கும்.
இதய நோய் குணமாகும்
ஆண்டி ஆக்சிடன்ட் இந்த அரிசியில் அதிகளவு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டுயானம் அரிசியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இன்னும் பிற பயன்கள்
இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது.
நீடித்த எனர்ஜி கிடைக்கும். மேலும் விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காட்டு யானம் அரிசி சாதம் செய்முறை விளக்கம்:
காட்டுயானம் அரிசி சாதமாக செய்ய சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அரிசி கடினமாக இருப்பதால் வேகுவதற்கு கூடுதல் கவனம் தேவை. ஆறிலிருந்து 12 மணி நேரம் வரை நீங்கள் இந்த அரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அரைத்து கஞ்சியாக குடிக்க வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் ஊற வைக்கலாம். சாதமாக வடித்து சாப்பிட வேண்டும் என்றால் 12 மணி நேரம் ஊற வையுங்கள்.
ஊற வைத்து எடுத்த அரிசியில் நான்கு பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வையுங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பை குறைவான தீயில் வைத்து மீண்டும் 7-லிருந்து 8 விசில் வரை விட்டு எடுங்கள். சாதம் பூ போல மலர்ந்து நன்கு வெந்து வந்திருக்கும். இந்த சாதத்துடன் நீங்கள் வழக்கமான குழம்பு, கூட்டு வைத்து சாப்பிடலாம் அல்லது தயிர், பச்சை மிளகாய் வைத்து கஞ்சியாகவும் குடிக்கலாம். இந்த அரிசியில் இட்லி, தோசை, கிச்சடி கூட செய்வது உண்டு. அடிக்கடி இதை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கும் காட்டு யானை போல நல்ல பலம் பொருந்தியவர்களாக இருப்பீர்கள்.
மேலும் படிக்க | நரைத்த முடி பற்றிய கவலையா? அப்போ சட்டுனு இதை ட்ரை பண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ