தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. ஆனால், அந்த முட்டையில் புரதம் மிக குறைவாக இருந்தால், ஆரோக்கிய பலன்களை பெற இயலாது. எனினும், முட்டையின் நிறத்தை வைத்து அதில் புரதம் குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். முட்டையின் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு முட்டையின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறது. முட்டையின் மஞ்சள் கருவின் நிறத்தைப் பார்த்தால், முட்டையிட்டது ஆரோக்கியமான கோழியா அல்லது ஆரோக்கியமற்ற கோழியா என்பதை அறியலாம். ஆரோக்கியமான கோழி இட்ட முட்டையில் புரோட்டீன் அதிகம் இருக்கும்.
சந்தையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலையில் முட்டைகள் கிடைக்கின்றன. அதன் தரமும் வெவ்வேறாக இருக்கும். முட்டையை உடைக்கும் போது அதனுள் இருக்கும் மஞ்சள் கரு முக்கியமாக மூன்று வகையாக இருக்கும். ஆரஞ்சு, வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள். இதில், ஆரஞ்சு மஞ்சள் கருவுடன் கூடிய முட்டை மிகவும் ஆரோக்கியமானது. அதில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம். ஆரோக்கியமான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து , சூரிய வெளிச்சம் உடலில் நன்றாக படும் வகையில் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். மற்ற கோழிகளை விட இயற்கை சூழலில் வளர்க்கப்படும் கோழிகள் ஆரோக்கியம் கொண்டவை என உணவு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோழிகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளி, சரிவிகித உணவு ஆகியவை கிடைக்கும். எனவே நீங்கள் வாங்கும் முட்டையில் மஞ்சள் கரு, அடர் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் தொடர்ந்து அதே கடையில் நிம்மதியாக வாங்கலாம்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
சில முட்டைகளின் மஞ்சள் கரு வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். வெளிர் ஆரஞ்சு நிற கரு கொண்ட முட்டையும் சற்று ஆரோக்கியமானது தான். இருப்பினும், மஞ்சள் நிற கரு கொண்ட முட்டைகள் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற கோழிகளின் முட்டைகளாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ