வரும் மார்ச் 2-ஆம் நாள் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுதை முன்னிட்டு, பயணங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 500 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது!
இந்த சிறப்பு ரயில்கள் மேற்குவங்கம், பிஹால் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஹோலி பண்டிகையை முன்னிட்டு 54 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 54 ஜோடிகளில், 5 ஹௌரா - முஹாப்பர் வழித்தடத்திலும், 4 ஹௌரா - ராம்நகர் வழித்தடத்திலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பகல்பூர் - சஹர்ஷா வழித்தடத்தில் 45 ரயில்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 7 லட்சம் மக்கள் பயனடைவர் என தெரிகிறது. கடந்தாண்டினை போன்று தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க 60 கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு 440 சிறப்பு ரயில்கள் இயக்கப்ட்டதால் சுமார் 6 லட்சம் பயனடைந்தனர் எனவும், தற்போது ரயில்களின் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளதால் அதிக அளவில் மக்கள் பயனடைவர் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.