7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்துக்கான உயர்வை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. மறுபுறம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் விரைவில் மூன்று பரிசுகளை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் டிஏ அதிகரிப்பு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு மற்றும் 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஆகியவை அடங்கும். இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான கவுன்டவுனும் தொடங்கியுள்ளது.
மார்ச் 15ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கக்கூடும். இந்த நாளில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் அதிகரிப்பு குறித்து பிரதமர் அறிவிக்கலாம். முன்னதாக, மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக இது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை 4 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயரும். எனினும், அரசு இன்னும் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை.
2023 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது நடந்தால், மார்ச் 31 முதல், ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியமும் கிடைக்கும். இதுமட்டுமின்றி ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான பணமும் நிலுவைத் தொகையாக ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும்.
மேலும் படிக்க | 7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம்
18 மாதங்களுக்கான டிஏ அரியர் கொகை குறித்த முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை முடங்கிய அகவிலைப்படியின் அரியர் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு மத்திய அரசு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஊழியர்களுக்கு பம்பர் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கொரோனா காலத்தில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாதங்களின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி இன்னும் நிலுவையில் உள்ளது. கோரோனா தொற்றுநோய் காரணமாக உருவான அசாதாரண சூழலால், நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ-வை முடக்கியது. நிலைமை சற்று சீரானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது.
ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் அரசாங்கம் நடுத்தர வழியைக் கடைப்பிடித்து, மொத்தத் தொகையை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடலாம். இது நடந்தால் ஊழியர்களின் கணக்கில் ரூ.2.18 லட்சம் வரை வரக்கூடும். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை எட்டு தவணைகளில் அளிக்கக்கூடும் என சில அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு
மத்திய அரசின் ஃபிட்மென்ட் ஃபேக்டரில் திருத்தம் செய்வது குறித்து அரசு வேகமாக பரிசீலித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும்.
தற்போது, மத்திய ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் பாக்டர் வழங்கப்படுகிறது. அதை 3.68 மடங்காக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் பாக்டர் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.6000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. உச்சவரம்பு ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்தை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மீது பண மழை! இந்த சலுகையை மோடி அரசு வழங்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ