இந்தியாவின் முதல் தொடர்பு தடமறிதல் செயலியான ஆரோக்ய சேது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரோக்ய சேது, நாட்டில் சுமார் 150 மில்லியன் பயனர்களால் தங்கள் மொபைல் ஃபோன்களில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து மக்கள் சுய மதிப்பீடு செய்து கொள்வதையும், தாங்கள் இருக்கும் அபாய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இயக்குநர் ஜெனரல் இப்போது இந்த செயலியைப் பாராட்டியுள்ளார். மேலும் COVID-19 ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காண நகர பொது சுகாதாரத் துறைகளுக்கு ஆரோக்ய சேது (Aarogya Setu) உதவியுள்ளது என்றும் அவர் தன் பாராட்டில் கூறியுள்ளார்.
None other than @DrTedros of @WHO mentions how @SetuAarogya has helped cities identify emerging hotspots and helped limit the pandemic. https://t.co/7evLVFPpsK
— Aarogya Setu (@SetuAarogya) October 13, 2020
பரவுகின்ற தொற்றுநோயைக் கண்டறிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கு உலக வங்கி சமீபத்தில் ஆரோக்ய சேது செயலியை மேற்கோள் காட்டியது. மே 2020 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலிகளில் முதல் 10 இடங்களில் Aarogya Setu இடம் பெற்றது.
ALSO READ: மீண்டும் கொரோனா மேடாகிறதா கோயம்பேடு? Health Department அளித்த பகீர் Report!!
"இந்தியாவின் ஆரோக்ய சேது செயலி 150 மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் COVID கிளஸ்டர்களாக உருவாகக்கூடும் பகுதிகளை அடையாளம் காணவும், இலக்கு வழியில் சோதனையை விரிவுபடுத்தவும் நகர பொது சுகாதார துறைகளுக்கு இது உதவியுள்ளது" என்று WHO இன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் மதிப்பீடு செய்து கணக்கிட, இந்த செயலி Bluetooth, செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதம்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. மேலும் இந்த செயலி குஜராத்தி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 11 வெவ்வேறு மொழிகளில் செயப்லடுகிறது. கூகிள் பிளே ஸ்டோர் (Google Playstore) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இந்த செயலியைப் பதிவிறக்கலாம்.
ALSO READ: Shocking ஆய்வு: Smartphones, Currency note-களில் 28 நாட்களுக்கு இருக்கும் Corona Virus
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR