மோடி-ன் பத்திரிகையாளர் சந்திப்பு ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு!

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு!!

Last Updated : May 18, 2019, 03:22 PM IST
மோடி-ன் பத்திரிகையாளர் சந்திப்பு ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு! title=

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு!!

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கும் நாளை (19 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் அனிவரும் தற்போது இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு, அவர் வழக்கமாக வானொலியில் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது போல இருந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து, பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பிரதமர் மோடி உரையாற்றினாலும், செய்தியாளர்களின் கேள்விக்கு அமித்ஷா மட்டுமே பதிலளித்தார்.

இதை குறிப்பிட்டு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி, வானொலிக்கு பதிலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது போல், இந்த செய்தியாளர் சந்திப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது பிரதமரின் பேச்சு மற்றும் உடல் மொழிகள் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்ததாகவும், அகிலேஷ் யாதவ் தமது பதிவில் விமர்சித்துள்ளார்.

 

Trending News