பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் LCA விமானங்களை நிறுத்தியுள்ள IAF..!!!

ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் எல்லைகளில் துருப்புகளை ஆயுதங்களையும் சீன அனுப்பி வருவதால் சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது

Last Updated : Aug 18, 2020, 04:07 PM IST
  • ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் எல்லைகளில் துருப்புகளை ஆயுதங்களையும் சீனா அவ்வப்போது அனுப்பிக் கொண்டே இருக்கிறது.
  • தேஜஸ் மார்க்-1A விமானத்தின் எடை குறைவாக இருப்பதால், அதிக செயல் திறன் கொண்டதாக இருக்கிறது.
  • 83 தேஜஸ் மார்க் 1A விமானத்திற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் LCA விமானங்களை நிறுத்தியுள்ள IAF..!!! title=

ஒரு பக்கம் இந்தியாவுடன் பல நிலைகளில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு, இருந்தாலும், சீன எப்போதுமே நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எப்போதுமே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனா எபோது வேண்டுமானாலும் முதுலில் குத்த தயங்காது. 

ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் எல்லைகளில் துருப்புகளை ஆயுதங்களையும் சீன அனுப்பி வருவதால் சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கும் நிலையில், இந்திய விமானப்படை  பாகிஸ்தான் எல்லையில் போர்  இலகு ரக போர் விமானமான தேஜஸை நிறுத்தியுள்ளது.

இலகு ரக போர் விமானமான (LCA )தேஜாஸ் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில், எதிரியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் வகையில் இந்திய விமானப்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது

தெற்கு ஏர் கமாண்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள சூலூரை மையமாகக் கொண்ட முதல் LCA தேஜாஸ் படையின், 45 விமானங்கள், எல்லை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக விமான படை  வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்நாட்டு தேஜாஸ் விமானத்தை பற்றி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது அதனை பாரட்டினார். அங்கு LCA  மார்க் 1A வகையில் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!

தேஜஸ் மார்க்-1A விமானத்தின் எடை குறைவாக இருப்பதால், அதிக செயல் திறன் கொண்டதாக இருக்கிறது. தேஜஸ் மார்க்-1  வகை போர் விமானத்தை விட, அதன் மேம்பட்ட வகையான புதிய மார்க்-1A  விமானத்தை பராமரிப்பதும் மிகவும் எளிது.  
இந்த இலகு ரக போர் விமானத்தில்  எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை துல்லியமாக கண்டறிவதற்கான நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இதன் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தலாம்.

83 தேஜஸ் மார்க் 1A விமானத்திற்கான ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைகளில் சீன ஆக்கிரமிப்பைக் கருத்தில் கொண்டு, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான எல்லைகளில் தீவிர கணகாணிப்பை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ | சீனாவிலிருந்து இந்தியவிற்கு இடம் பெயர தாயாராகும் 24 மொபைல் நிறுவனங்கள்...!!

மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய விமான படை தீவிர எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  மேலும் எல்லை பகுதிகளில் சமீப காலங்களில் பகல்நேரம் மற்றும் இரவு நேரம் என 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

Trending News