பாஜக-வை காங்கிரஸ் வீழ்த்தி ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் என ஆனந்த்சர்மா தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நேற்று பனாஜியில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்கும் எனவும், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தது, அதே நிலைதான் தற்போது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு ஜோதிடர் அல்ல, ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பாஜக-வையும், தேசிய முற்போக்கு கூட்டணியையும் காங்கிரஸ் தோற்று அதிக இடங்களில் வெற்றி பெறும். அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும், பாஜக-வும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவிக்கையில்., “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.