கெஜ்ரிவால் - கமல் இன்று சந்திப்பு; தமிழக அரசியலில் அதிரடி!

Last Updated : Sep 21, 2017, 08:39 AM IST
கெஜ்ரிவால் - கமல் இன்று சந்திப்பு; தமிழக அரசியலில் அதிரடி! title=

ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வர உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். இதற்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகிறது.

கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார். 

இதையொட்டி நடிகர் கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அம்மாநில அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவித்தார் கமல். மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் நடிகர் கமல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சந்திக்கிறார். 

இதுகுறித்து ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சென்னைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செல்கிறார். அங்கு நடிகர் கமல் ஹாசனை சந்தித்து பேசவுள்ளார். அரசியல் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடுவார்கள் எனத் தெரிகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தையும் கேஜரிவால் பார்வையிட உள்ளார்" என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பினராய் விஜயன், கெஜ்ரிவால் என கமல் சந்திப்பது அவர் தனது அரசியல் வாகனத்தை ஓட்டிச் செல்ல விரும்புவதன் அறிகுறியாக அரசியல் பார்வையாளர்களுக்கு தெரிகிறது.

Trending News